என் மலர்
நீங்கள் தேடியது "Survey of Kriwalabadi locations"
- கலெக்டர் நடவடிக்கை
- தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம் விதித்து அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
23-ந் தேதி வியாழக்கி ழமை தேரோட்டமும், 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு புரணி தீபமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிது.
தீப தரிசனம்கான 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் கோவில் மாடவீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.
தேரோடும் மாடவீதிகளில் நடைபெற்று வரும் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை முறையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளவும், இந்த மாதம் 10-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும் கிரிவலப்பா தையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை யினர் அகற்ற வேண்டும்.
நெடுஞ்சாலை த்துறையினர் அப்புறப்ப டுத்திய பின்னரும் சாலையோர ஆக்கிரமிப்பு செய்யும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிவலப்பாதையில் கூடுதல் குப்பை தொட்டி களை அமைக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கிரிவலப் பாதையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, கோட்டாட்சியர் மந்தாகினி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப்பொ றியாளர் ரகுராமன், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜூ, செயற்பொ றியாளர் ஜெகநாதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சரண்யாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், தாசில்தார் சரளா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.