search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUV"

    • புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தகவல்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய தலைமுறை ரெனகேட் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எஸ்.யு.வி. 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவல் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த கார் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் காமன் மாட்யுலர் பிளாட்ஃபார்மில் (CMP) உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோயன் C3 மாடல் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ஜீப் எஸ்.யு.வி. ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    புதிய ஜீப் ரெனகேட் மாடல் பேட்டரி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கும் போது, அதன் பெட்ரோல் வெர்ஷனின் விலை சில லட்சங்கள் வரை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், புதிய ஜீப் எஸ்.யு.வி.யின் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கலாம். 

    • ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.
    • தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள சிப்ரி பஜார் பகுதியில் ஒரு முதியவர் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் சிப்ரி பஜாரில் சற்று நெரிசலான ஒரு குறுகிய தெருவில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வெள்ளை நிற கார் திரும்புவதைக் காட்டுகிறது. ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, ராஜேந்திர குப்தா, SUVயில் அடிபட்டு கீழே விழுந்தார்.

    முதியவர் வலியால் அலறியபோது 70 வயது முதியவரை சில மீட்டர்கள் இழுத்துச் சென்ற SUV டிரைவர் சக்கரங்களுக்கு அடியில் இருப்பது தெரியாமல் வாகனத்தை பின்னுக்குத் தள்ளினார். பின்னர் அந்த காரின் சக்கரம் அவர் மீது ஏறி நின்றது.

    பின்னர், அந்த நபர் தொடர்ந்து கத்தியதால், சத்தம் கேட்டு மக்கள் SUVயை நோக்கி ஓடி வந்து காருக்கு அடியில் இருந்த முதியவரை மீட்டனர். அதை தொடர்ந்து ஓட்டுநரும் கீழே இறங்கினார். அதிக எடையுள்ள SUVயால் அந்த நபருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அடிப்பட்ட முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கு ஆபத்து மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.



    • பல்வேறு காரணங்களுக்காக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்
    • நகரிலேயே வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை

    மேற்கத்திய நாடுகளில் பொது போக்குவரத்திற்கான அரசு வாகனங்கள் குறைவு. மக்களில் பெரும்பாலானோர், கார்களையே தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

    சமீப சில வருடங்களாக, உலகளவில் எஸ்யூவி (Sports Utility Vehicles) எனப்படும் கார்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது.

    அவற்றில் அமரும் இட வசதி, பயணிப்பவர்களுக்கான எண்ணிக்கை, பொருட்களுக்கான இடம் உள்ளிட்டவை சிறிய கார்களை விட அதிகம். மேலும், இவை நீண்ட தூர பயணத்திற்கும், கரடுமுரடான சாலைகளிலும் செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவை.

    எனவே, பெரும்பாலான மக்கள் எஸ்யூவி ரக கார்களையே விரும்பி வாங்குகின்றனர்.

    ஆனால், இவற்றை நிறுத்த அதிக இடம் தேவைப்படும்.

    இந்நிலையில், பாரிஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களில் இது சிக்கலை தோற்றுவித்ததால், இவற்றிற்கான வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்த அரசு, இது குறித்து மக்களின் எண்ணத்தை அறிய பொதுஜன வாக்கெடுப்பு (referendum) நடத்தியது.

    நேற்று நடைபெற்ற இந்த பொதுஜன வாக்கெடுப்பில், சுமார் 54.5 சதவீத மக்கள் கட்டண அதிகரிப்பிற்கு சம்மதித்துள்ளனர்.


    இதன்படி, பாரிஸ் நகரத்திற்கு உள்ளே, 1.6 டன் மற்றும் கூடுதலான எடையுள்ள வாகனங்களுக்கு சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம், சுமார் ரூ.1600 (18 யூரோக்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண விகிதம், முன்பிருந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இது, தினந்தோறும் பல வெளியூர்களில் இருந்து பாரிஸ் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    பாரிஸ் நகரிலேயே வசிப்பவர்களுக்கான கட்டணம் மாற்றப்படாததால், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

    பாரிஸ் நகர மேயர், ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo), இதுவரை தனது 10-வருட பதவிக்காலத்தில், நகரின் பல இடங்களை பாதசாரிகளுக்கு சாதகமாகவும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாற்றி அமைத்து வருகிறார்.

    எஸ்யூவி ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்புகள் அதிகமாவதாகவும், அவற்றின் பயன்பாட்டிற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு பலராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் புதிய என்ட்ரி-லெவல் எஸ்யுவி மாடலை வெளியிட இருப்பதாக ஜீப் இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நான்கு மீட்டர் அளவு கொண்ட புதிய எஸ்யுவி மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜீப் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய எல்யுவி அந்நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

    புதிய என்ட்ரி-லெவல் ஜீப் எஸ்யுவி அடுத்த தலைமுறை ஃபியாட் பான்டா மற்றும் 500 பிளாட்ஃபார்ம் கொண்டிருக்கும். ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் பிளாட்ஃபார்மின் படி, பான்டா 4X4 மாடலை தழுவி பாடி மற்றும் உள்புறத்தை ஜீப் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய எஸ்யுவி ஜீப் வழக்கமான வடிவமைப்புகளுடன் ஆஃப்-ரோடிங் திறன்களை கொண்டிருக்கும். சர்வதேச சந்தையில் 2022-ம் ஆண்டிற்குள் ஜீப் நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் மற்றும் பத்து பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இத்துடன் 2022-ம் ஆண்டு ராங்களர் பிக்-அப் மற்றும் கிரான்ட் வேகனீர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.



    இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான எஸ்யுவி மாடல்கள் அளவில் நான்கு மீட்டருக்கும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் விற்பனையை அதிகரிக்க புதிய என்ட்ரி-லெவல் எஸ்யுவி மாடலை பயன்படுத்திக் கொள்ள ஜீப் திட்டமிட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி மட்டுமின்றி மூன்று அடுக்குகள் கொண்ட மிட்-சைஸ் யூடிலிட்டி வாகனத்தை அறிமுகம் செய்யவும் ஜீப் திட்டமிட்டிருக்கிறது.

    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனமும் இந்தியாவை உறுதியான ஏற்றுமதி களமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜீப் நிறுவன தலைமை செயல் அதிகாரி மைக் மேன்லி கூறும் போது, மகாராஷ்ட்ராவில் உள்ள ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவன தயாரிப்பு ஆலையின் தயாரிப்பு திறனை அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    தற்சமயம் இந்த ஆலையில் 1,60,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 2,40,000 யூனிட்களை தயாரிக்க ஜீப் திட்டமிடுகிறது. இத்துடன் நாட்டில் தற்சமயம் உள்ள ஜீப் விற்பனையகங்களின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க ஜீப் மிடிவு செய்துள்ளது. இதேபோன்று சர்வீஸ் மையங்களும் அதிகரிக்கப்படுகிறது.
    ரோல்ஸ் ராய்ஸ் கலினன் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கலினன் எஸ்யுவி முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடலான கலினன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1905-ம் ஆண்டு எடுக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கவை சேர்ந்த 3106 கேரட் வைரத்தின் பெயரை தழுவி புதிய கலினன் பெயரிடப்பட்டுள்ளது.

    ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எஸ்யுவி சார்ந்த புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் கசிந்திருந்த நிலையில், தற்சமயம் புதிய கலினன் ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. 

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய கலினன் முன்பக்கம் பார்க்க ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் போன்றே காட்சியளிக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் மாடலின் கவர்ச்சிகர அம்சமான ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் பாந்தியன் கிரில் புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. கிரிலுடன் மேம்படுத்தப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    முன்பக்க பம்ப்பரில் க்ரோம் அம்சங்கள் காரின் தோற்றத்தை கவர்ச்சிகரமாக்குகிறது. ஐந்து பேர் அமர்ந்து செல்லக்கூடிய புதிய எஸ்யுவி 22 இன்ச் சக்கரங்களை கொண்டுள்ளது. மற்ற வீல் டிசைன் மற்றும் அளவுகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ள முடியும். ரோல்ஸ் ராய்ஸ் என்பதால் கஸ்டமைசேஷன் அம்சங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.



    சமீபத்திய ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை போன்றே புதிய கலினன் மாடலும் உச்சக்கட்ட ஆடம்பர அனுபவத்தை வழங்க அலுமினியம் பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுகளில் கலினன் மாடலின் கண்ணாடிகளில் க்ரோம் டீடெயிலிங் செய்யப்பட்டு, ஹேன்டில் மற்றும் டோர் சில்களை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    புதிய ரோல்ஸ் ராய்ஸ் மாடல் சூசைடு டோர்களை பெறும் முதல் எஸ்யுவி மாடலாக அமைந்துள்ளது. பின்புறம் கலினன் மாடல் பார்க்க 1930 காலத்து ரோல்ஸ் ராய்ஸ் போன்ற டி-பேக் கொண்டுள்ளது. இந்த மாடல்களில் பின்புறம் பயணமூட்டைகளை வைக்கும் இடவசதிகளை கொண்டிருந்தது. 

    உள்புறம் எஸ்யுவி மாடலை கஸ்டமைஸ் செய்யும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுழ்ளளது. மற்ற ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை போன்று புதிய மாடலிலும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. ஐந்து பேர் அமரக்கூடிய மாடலை ஒற்றை சீட் வடிவமைப்பில் நான்கு பேர் அமரக்கூடியதாக மாற்ற முடியும். இம்மாதிரியான வடிவமைப்பு அதிக சவுகரியத்தை வழங்கும்.




    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ V12 பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பேன்டம் மாடலிலும் இதே இன்ஜின் வழங்கப்பட்டுள்ள நிலையில், கலினன் மாடலில் இன்ஜின் ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 571 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்கியூ @1600 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.
     
    அதிநவீன இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் மாடல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் மாடலில் முதல் முறையாக ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் புதிய கலினன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறுது. 

    புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் பேன்டம் மற்றும் கோஸ்ட் மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட இருக்கும் நிலையில் இதன் விலை ரூ.5 முதல் ரூ.8 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலின் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,


    ×