என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swachh Bharath"

    • சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மர கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஓடையில் அமலை செடிகள் அகற்றப்பட்டது.

    நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சி டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது வார்டு அபிராமி நகர் பூங்காவில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் "பொது இடங்களில் பெருமளவில் மரம் நடுதல்" என்ற தலைப்பில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மர கன்றுகள் நடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த வார்டு பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு பூங்காவில் நடப்பட்டுள்ள 5 செடிகளுக்கும் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஓடையில் படர்ந்திருந்த அமலை செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. சிறிய பொக்லைன் மூலமாக நடந்த இப்பணியின் மூலம் சுமார் 3 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

    ×