search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swim"

    • குண்டாறு நீர்த்தேக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • இப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவது பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்காசி மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்பிய இந்த நீர்த்தேக்கத்திற்கு விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    அழகிய ரம்மியமான இயற்கை அழகு மற்றும் நெய்யருவி உள்ளிட்ட பல்வேறு தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு நீர்த்தேக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில்சுவர்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், நீச்சல் அடித்தும் உற்சாகமாக நீராடி வருகின்றனர்.

    இதனால் ஆபத்து நேரிடும் அபாயம் ஏற்படுகிறது.

    அணையின் மதில் சுவற்றில் அமர்ந்து நீச்சல் அடித்து குளிக்கும் வாலிபர்களை தடுக்கவோ, தடுத்து நிறுத்தவோ துறை சார்ந்த அரசு அதிகாரிகளோ, அலுவலர்களோ இல்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க இப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் திறந்த வெளியில் மது அருந்துவது பொது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. இங்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி நிறுத்திடவும், அணைக்கட்டியின் மேல் குளிக்கும் வாலிபர்களை தடுத்து நிறுத்துவதுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

    ×