என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sydney Test"
- முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
- 2-வது இன்னிங்சில் 115 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தது. பின்னர் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை 299 ரன்னில் சுருட்டியது. ஜமால் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 14 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் சொதப்பியது. ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. முகமது ரிஸ்வான் 6 ரன்களுடனும், ஜமால் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 28 ரன்னிலும், ஜமால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது. ஹேசில்வுட் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
லபுசேன்- டேவிட் வார்னர்
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது அவரின் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும்.
லபுசேன் 62 ரன்களும, ஸ்மித் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஆமிர் ஜாமல் ஆட்டநாயகன் விருதும், பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சிட்னி:
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்னும், ஆமிர் ஜமால் 82 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. லபுசேன் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து வெளியேறினர். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர்.
பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 6 விக்கெட்டும், அகா சல்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
14 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். அயூப் 33 ரன்னும், பாபர் அசாம் 23 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- லபுசேன், மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தனர்.
- ஆமிர் ஜமால் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அத்துடன் 2-வது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 38 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த மிட்டிசெல் மார்ஷ் அரைசதம் அடித்து 54 ரன்னில் வெளியேறினார். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர். இந்த ஜோடி ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியா மளமளவென விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.
பின்னர் கடைநிலை பேட்ஸ்மேன்களை ஆமிர் ஜமால் அடுத்தடுத்து வீழ்த்த ஆஸ்திரேலியாவால் ரன் சேர்க்க முடியாமல் 299 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜமால் கடைசி ஏழு பந்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் மொத்தம் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் தற்போது 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினால் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
- போதிய வெளிச்சம் இல்லாததால் (Bad Light) ஆட்டம் நிறுத்தப்பட்டது.
- 46 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இன்றைய ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா 1 ஓவரில் 6 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கவாஜா உடன் லபுசேன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 47 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைக்காலம். இருந்தபோதிலும் திடீரென கருமேகம் சூழ்ந்ததால் போட்டி தொடர்ந்து நடைபெறவில்லை. இன்றைய ஆட்ட நேரம் முடியும்வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இதனால் 2-வது நாள் ஆட்டம் 47 ஓவருடன் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட் ஆனார்கள்.
- 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியதுடன் தொடரில் 2-0 முன்னிலை விக்கிறது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக், சாய்ம் ஆயுப் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
ஐந்து விக்கெட் வீழ்த்தி கம்மின்ஸ்
ஷான் மசூத் 35 ரன்னிலும், பாபர் அசாம் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. சிறப்பாக ஆடிவந்த முகமது ரிஸ்வான் 88 ரன்னில் அவுட் ஆனார். ஆகா சல்மான் 53 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி விக்கெட்டுக்கு ஆமிர் ஜமால் உடன் மிர் ஹம்சா ஜோடி சேர்ந்தார். மளமளவென விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசி விக்கெட்டை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தானை 250 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தனர்.
ஆனால், ஹம்சா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஜமால் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்தையும், லயனின் சுழற்பந்தையும் இந்த ஜோடி திறமையாக எதிர்கொண்டது. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் 250, 275, 300 என உயர்ந்து கொண்டே சென்றது. அதேவேளையில் ஜமால் அரைசதத்தை கடந்தார்.
என்னடா... கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லையே... என ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர்.
அரைசதம் அடித்த ஜமால்
ஜமால் சதம் அடிப்பார்... பாகிஸ்தான் 325 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். ஜமால் 82 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 77.1 ஓவரில் 313 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.
ஜமால்- ஹம்சா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
புஜாரா, மயாங்க் அகர்வால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. மயாங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். புஜாரா 130 ரன்களுடனும், விகாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.
அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய ரிஷப் பந்த் சதம் அடித்தார். மறுமுனையில் ஜடேஜா அரை சதம் கடந்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 500 ரன்களைத் தாண்டியது. 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்தனர்.
இந்நிலையில் ஜடேஜா 81 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஹாரிஸ், கவாஜா களமிறங்கினர். #AUSvIND #SydneyTest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்