search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 Blast"

    • முதலில் ஆடிய சாமர்செட் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய குளோசெஸ்டர் அணி 15 ஓவரில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

    இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் குளோசெஸ்டர்ஷைல் அணிகள் மோதின. டாஸ் வென்ற குளோசெஸ்டர்ஷைல் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சாமர்செட் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லூயிஸ் கிரெகோரி அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குளோசெஸ்டர்ஷைல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், 15 ஓவரில் குளோசெஸ்டர் ஷைல் அணி 129 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    • டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டர்ஹாம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து விளையாடிய சர்ரே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இறுதியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில் இப்போட்டியில் சர்ரே அணியின் விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்டுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. டாம் கரன் வீசிய வைட் யார்க்கர் பந்தை பாஸ் டி லீக் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் ஓட முயற்சித்தார். அப்போது அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்து வில் ஜேக்ஸ் அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் பேட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பாதி களத்தில் நிற்க, வில் ஜேக்ஸ் பந்தை விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸிடம் த்ரோ அடித்தார். ஆனால் பந்தை சரியாக பிடிக்க தவறிய நிலையில், தனது கைகளால் மட்டுமே ஸ்டம்பினை தகர்த்தார். பிறகு அவர் தனது தவறை உணர்ந்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்த நேரத்தில், ஜோன்ஸ் பாதுகாப்பாக தனது கிரீஸிற்கு திரும்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் - ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின.
    • இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் - ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கென்ட் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பில்லிங்ஸ் 43 ரன்கள் எடுத்தார். ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் தரப்பில் வுட், ஜேம்ஸ், ஹோவெல், லியாம் டாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து ஆடிய ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணி 19.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் இன்னிங்சின் கடைசி ஓவரை கிறிஸ் வூட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எவிசன் எதிர் கொண்டார். அந்த பந்தை வேகமாக விளாசினார். ஆனால் அந்த பந்து எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் பார்கின்சன் மீது தாக்கியது. இதனால் அவர் மைதானத்தின் பாதியில் சுருண்டு விழுந்தார். அவர் மீது பட்ட பந்து பவுலர் வூட் பக்கம் சென்றது. அதனை எடுத்துக் கொண்ட அவர் ஸ்டெம்பை அடித்து அவுட் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஸ்டெம்பை அடிக்காமல் கடைசி பந்தை வீசுவதற்காக சென்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கைதட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி.
    • இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர், வார்விக்ஷையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.

    வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி, லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ், ராபர்ட் யேட்ஸ் ஆடினர்.

    நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.

    முதல் பந்தில் அலெக்ஸ் டேவிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    2-வது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் கிளின் போல்டுஆனார்.

    3-வது பந்தில் டான் மவுஸ்ஸி ஒரு ரன் எடுத்தார்.

    4-வது பந்தில் யேட்ஸ் ஒரு ரன் எடுத்தார்.

    5-வது பந்தில் டான் மவுஸ்ஸி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    6-வது பந்தில் எட் பர்னார்ட் போல்டானார்.

    இதன்மூலம் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஷாஷின் அப்ரிடி 4 ஓவர்களில் 29 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசி அசத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருது ஷாஹின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வார்விக் ஷையர் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் காலிறுதி ஆட்டத்தில் கென்ட் அணியை வீழ்த்தியது லங்காஷைர் #T20Blast #Buttler
    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்து தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதல் காலிறுதி ஆட்டத்தில் கென்ட் - லங்காஷைர் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன சாம் பில்லிங்ஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.



    பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லங்காஷைர் அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களான டேவியஸ் (15), பட்லர் (0), லில்லி (9) சொற் ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜென்னிங்ஸ் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த கேப்டன் விலாஸ், கிளார்க் ஆகியோர் அவுட்டாகாமல் முறையே 30, 29 ரன்கள் அடிக்க லங்காஷைர் 18.4 ஓவரில 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    புகழ்மிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய ஜாஃப்ரா ஆர்செரின் ஜெர்சியை கேட்டுள்ளது லார்ட்ஸ் மியூசியம். #T20Blast
    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டமொன்றில் சசக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சசக்ஸ் அணி 19.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. மோர்கன் அதிரடியால் மிடில்செக்ஸ் அணி வெற்றியை நோக்கி சென்றது.

    மிடில்செக்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. மோர்கன் களத்தில் இருந்தார். ஜாஃப்ரா ஆர்செர் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மோர்கன் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்தில் 90 ரன்கள் குவித்தார்.



    அடுத்த பந்தில் ஜான் சிம்ப்சனையும், அதற்கடுத்த பந்தில் ஜேம்ஸ் புல்லரையும் அடுத்தடுத்து வெளியேற்றி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இவரது பந்து வீச்சால் சசக்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாரம்பரியம் மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மியூசியம் ஒன்று உள்ளது. இங்கு சாதனைப் புரிந்த வீரர்களை ஞாபகப்படுத்தும் வகையில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    அந்த வகையில் ஹாட்ரிக் சாதனைப் படைத்த ஆர்செரின் ஜெர்சியை மியூசியத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.

    பார்படோஸில் பிறந்த ஆர்செர் அந்நாட்டில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். ஏழு வருடங்கள் இங்கிலாந்தில் வசித்தால், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடலாம். அந்த வகையில் 2022-ல் ஆர்செர் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காததால், டி20 போட்டியில் விளையாட மொயீன் அலி விடுவிக்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, போர்ட்டர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

    ஆனால் ஆடும் லெவனில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மொயீன் அலி வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காகவும், போர்ட்டர் எசக்ஸ் ஈகிள் அணிக்காகவும் விளையாடி வருகின்றன.


    போர்ட்டர்

    டி20 பிளாஸ்ட் தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இவர்கள் பங்கேற்றுள்ள அணிகள் முதல் நான்கு இடத்திற்குள் வந்தால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஐந்து நாட்கள் சும்மா இருப்பதை விட டி20யில் விளையாட விரும்பினார்கள்.

    இதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருவரையும் இங்கிலாந்து அணியில் இருந்து விடுவித்துள்ளது.
    ×