என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 series"

    • 3 டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ம் தேதியும், 3-வது போட்டி 25-ம் தேதியும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

    மேலும், இத்தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடர் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6ல் தொடங்கி 11 வரை நடைபெறுகிறது.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

    ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் விலகியுள்ளார். #NZvIND #MartinGuptill
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் விலகியுள்ளார்.

    முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் குணமடையவில்லை. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையததால் 20 ஓவர் போட்டியில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். #NZvIND #MartinGuptill
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. #India #t20Series
    புதுடெல்லி:

    இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு  சாதனைகளையும் படைத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றது.



    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை - வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #India #t20Series
    இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே, அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 2-0 என எளிதாக வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அந்த தொடரின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவுக்கு அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின்போது இடதுகை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பதிலாக தீபக் சஹார், சர்துல் தாகூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND
    இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். #MSDhoni #INDvIRE #WaterBoyDhoni

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. 

    இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. ராகுல் 70 ரன்களும், ரெய்னா 69 ரன்களும், பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி, 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

    நேற்றைய போட்டியில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனான டோனி விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த போட்டியில் விளையாடாத டோனி, இந்திய அணி பேட்டிங் பிடித்து கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன்களின் கிட்பேக் சுமந்தபடி மைதானத்திற்குள் வந்தார். அதோடு பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீரும் கொண்டு வந்தார். பொதுவாக அணியின் புதிதாக இடம்பிடித்தவர்களே இந்த வேலையை செய்வார்கள். 



    ஆனால் அணியின் மூத்த வீரரான டோனியின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டோனியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். #MSDhoni #INDvIRE #WaterBoyDhoni
    அயர்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. #IREvIND #INDvIRE

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். கோலி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 



    அதிரடியாக விளையாடிய ராகுல் 36 பந்தில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். ராகுல் - ரெய்னா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா டக்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் சுரேஷ் ரெய்னா 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் மணிஷ் பாண்டே - ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் பாண்டியா அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 214 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 



    அதைத்தொடர்ந்து அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டிர்லிங் 2-வது பந்திலேயே டக்-அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வில்லியம் போர்டர்பீல்ட் களமிறங்கினார். அவர் 14 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் போல்டாகி வெளியேறினார். 

    அதற்கு அடுத்த ஓவரில் ஷனான் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்னிலும், கெவின் ஓ பிரையின் டக்-அவுட்டும் ஆகினர். இதனால் அயர்லாந்து அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது.



    அதைத்தொடர்ந்து சிமி சிங், சஹால் பந்தில் டக்-அவுட் ஆனார். அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. ஜார்ஜ் டாக்ரெல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டூவர்ட் தாம்சன் 13 ரன்னில் சஹால் பந்தில் போல்டானார். அயர்லாந்து அணி, 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.



    இந்திய அணியின் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகனாகவும், சஹால் தொடர்நாயகனானவும் தேர்வு செய்யப்பட்டனர். #IREvIND #INDvIRE
    அயர்லாந்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. #IREvIND #INDvIRE

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.



    ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். கோலி 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 

    அதிரடியாக விளையாடிய ராகுல் 36 பந்தில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். ராகுல் - ரெய்னா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா டக்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் சுரேஷ் ரெய்னா 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் மணிஷ் பாண்டே - ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் பாண்டியா அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 214 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #IREvIND #INDvIRE
    அயர்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #IREvIND

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.



    இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய தவான் 45 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவான் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 61 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.



    இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டிர்லிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பால்பிர்னி 11 ரன்னிலும், சிமி சிங் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஷனான் அரைசதம் கடந்தார். அவர் 35 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். 12-வது ஓவரை சஹால் வீசினர். அந்த ஓவரின் 3 மற்றும் 4-வது பந்துகளில் கெவின் ஓ பிரையின், கேரி வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.



    இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.. இதனால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், சஹால் 3 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அடுத்த டி20 போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது. #IREvIND
    அயர்லாந்தில் நடைபெற்றுவரும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. #IREvIND

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய தவான் 45 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவான் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.



    அதன்பின் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ரோகித் சர்மா தொடர்ந்து நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்முனையில் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். 



    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 61 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #IREvIND
    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 33 ரன்களிலும், ஜமான் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் சர்பராஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷோயிப் மாலிக் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். மற்றவர்கள் பிராகசிக்க தவறியதால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. மாலிக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் மைக்கெல் லீஸ்க் 3 விக்கெட்களும், கிறிஸ் சோலே 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.  அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் நிதானமாக ரன் சேர்த்தனர். அவர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். கொயிட்செர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதைத்தொடர்ந்து வந்த கலம் மெக்லியோட் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 14.4 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்களும், உஸ்மான் கான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். #SCOvPAK #PAKvSCO

    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 14 ரன்களிலும், ஜமான் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கேப்டன் சர்பராஸ் அகமது, ஷோயிப் மாலிக் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 



    இருவரும் அரைசதம் கடந்தனர். அதிரடியாக விளையாடிய மாலிக் 27 பந்தில் 5 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. சர்பராஸ் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டெய்ர் எவான்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சி பெர்ரிங்டன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கைல் கொயிட்செர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    இதுதவிர டைலான் பட்ஜ் 4 ரன்கள், கலம் மெக்லியோட் 12 ரன்கள், மேத்தீவ் கிராஸ் 13 ரன்கள் எடுத்தனர். மைக்கெல் லீஸ்க் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஹசன் அலி, ஷதப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்காட்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. #SCOvPAK #PAKvSCO
    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் டி20 போட்டியில், வங்காளதேசம் அணியின் வெற்றிக்கு 146 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #BANvAFG #AFGvBAN

    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. அதன்படி நடந்த முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர்.  தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஷசாத் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார்.



    இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. கனி 19 ரன்னிலும், ஸ்டானிக்சாய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நபி 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சமியுல்லா ஷென்வாரி, நஜிபுல்லா சத்ரான் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காளதேசம் அணிக்கு 146 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #BANvAFG #AFGvBAN
    ×