search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டை, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சந்திரபாண்டி (வயது 42). இவர் சமயநல்லூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். 

    இந்த நிலையில் சந்திரபாண்டி சம்பவத்தன்று காலை மாமனார் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். எனவே அவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு ரூமில் படுத்து தூங்கினார். 

    அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பிச்சென்றனர்.  


    இதுதொடர்பாக சந்திரபாண்டி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். 


    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலிபரிடம் செல்போன் விற்பதாக கூறி ஆன்லைனில் மர்ம நபர்கள் செய்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.39 ஆயிரம் மீட்டு வாலிபரிடம் ஒப்படைத்தனர்
    சேலம்:

    சேலம் போர்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த நவீன் குமார். இவர் இணையதளத்தில்  குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ரூ.39 ஆயிரத்து 500 முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதை நம்பி நவீன்குமார் போனில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு கூகுல்பே மூலம் ரூ.39 ஆயிரத்து 500  அனுப்பி வைத்தார்.

    ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு நவீன் குமார் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

    இதுகுறித்து  சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதில் நவீன் குமார் அனுப்பிய பணம் மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கும் பஞ்சாப்பில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கும் சென்றிருப்பது தெரியவந்தது. 

    மோசடி செய்யப்பட்ட பணத்தை நவீன்குமாருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளின் லீகல் டிபார்ட்மெண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நவீன்குமாரிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட  ரூ.39 ஆயிரம் 500 முழுவதும் அவரது வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது. 

    மேலும் இது போன்ற குறைந்த விலையில் செல்போன், 2, 4  சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம், குறைந்த வட்டியில் கடன் என்ற வரும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். 

    அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-க்கு விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத் தர இயலும் என  சேலம் சைபர் கிரைம் டி.எஸ்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ராணுவவீரர் வீட்டில் நகை-பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரைசேர்ந்தவர் ராமு(வயது35).இவர் ஜம்முகாஷ்மீரில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறார். மனைவி சுந்தரலேகா(29). இவர் கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தையல் வகுப்பிற்கு சென்றுவிட்டார். 

    அவர் மாலையில்  வந்து பார்த்தபோது பூட்டிய வீட்டின் கதவு  திறந்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன்நகை மற்றும் ரூ.30  ஆயிரம் ரொக்கம் கொள்ளைய
    டிக்கப்பட்டது தெரியவந்தது. 

    இது தொடர்பாக சுந்தரலேகா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த 
    பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். 

    அப்போது சுந்தரலேகா வீட்டிற்கு ராமுவின் அண்ணன் ராஜசேகர் மனைவி விஜயகுமாரி(எ)பேச்சிம்மாள், இவரது தோழி நாகதுர்கா இருவரும் வந்து சென்றது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமாரி, நாகதுர்க்காவிடம் விசாரணை நடத்திய போது இருவரும் சோ்ந்து ராமு வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நகை பணத்தை மீட்டனர்.

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தில் காரில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்தனர்.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த களங்காணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தாயி (வயது 77).

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 35 வயது மதிக்கத்தக்க பெண், கந்தாயியிடம் முகவரி கேட்டு பேச்சு கொடுத்தார். 

    அப்போது அந்த பெண், நான் ஏற்கனவே உங்களை பார்த்த போது, நீங்கள் நகை அணிந்திருந்தீர்கள், அதைப் போலவே நானும் செய்ய வேண்டும். எனவே அந்த நகையை காண்பியுங்கள் என கேட்டுள்ளார்.
     
    இதையடுத்து கந்தாயி, வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்று, அலமாரியில் வைத்திருந்த நகையை எடுத்து, அந்த பெண்ணிடம் காண்பித்தார்.

    பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தண்ணீர் கேட்டதால், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த கந்தாயி, அந்த பெண் அங்கு இல்லாததால் திடுக்கிட்டார். 

    பின்னர், வீட்டிற்குள் சென்று அலமாரியில் பார்த்த போது, அங்கு வைத்திருந்த 4½ பவுன் செயின் மற்றும்  35 ஆயிரம் பணத்தை அந்த பெண் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற பெண் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 உண்டியல்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறந்து பணம், நகைகள் கணக்கிடப்படும்.  ஒரு உண்டியல் அன்னதான திட்டத்திற்காக   பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அன்னதானம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்கு வந்த திருடர்கள் கண்காணிப்பு காமிராக்களை  வேறு திசையில் திருப்பி விட்டு உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.   

    அப்போது அன்னதான உண்டியலை தவிர மற்ற 3 உண்டியல்களுக்கும் அலாரம் இணைப்பு கொடுக்கப்பட்டு  இருந்தது. இதனால் அந்த உண்டியல்களை உடைத்தால் மாட்டி விடுவோம் என கருதி  அன்னதான உண்டியலை மட்டும் உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்தனர்.

    காலையில் கோவிலுக்கு வந்த பூசாரிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.   சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அதிகாரிகள்,  கொள்ளையடிக்கப்பட்ட  அன்னதான உண்டியல் கடந்த 25-ந்தேதி திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது. 

    இதனால்  தற்போது பெரிய அளவில் காணிக்கை பணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

    அலாரம் இணைக்கப்பட்டு இருப்பதால் மற்ற 3 உண்டியல்களில் உள்ள பணம், நகை தப்பியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கொள்ளை சம்பவம் குறித்து  அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×