என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நலம்"

    • ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும்.
    • ஒருசில அறிகுறிகளை கொண்டே உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    மனித உடலிலில் சராசரியாக 4.5 லிட்டர் முதல் 5.5 லிட்டர் வரை ரத்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உடல் வெப்பம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீராக பராமரிப்பதற்கு ரத்த ஓட்டமும் சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியமானது. ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் பல்வேறு உடல் உபாதைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும். மூளை, நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். ஒருசில அறிகுறிகளை கொண்டே உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

    குளிர்ச்சி: உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் ரத்த ஓட்டத்திற்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது. உள் உறுப்புகளுக்குள் ரத்த ஓட்டம் சீராக செல்லாமல் மோசமான நிலையில் பயணித்தால் குளிர் காய்ச்சல் உண்டாகும். கைகள், பாதங்களில் இயல்பான வெப்பநிலை குறைந்து குளிர்ச்சித்தன்மைக்கு மாறிவிடும்.

    வீக்கம்: ரத்த ஓட்ட செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் சிறுநீரகங்களில் அதன் தாக்கம் வெளிப்படும். அதன் காரணமாக கைகள், கால்கள், பாதங்கள் போன்ற இடங்களில் வீக்கம் உண்டாகும். அந்த பகுதிகளில் ரத்தத்தின் அளவு குறைந்து உடலில் உள்ள நீர்மம் அப்படியே தேங்கிவிடும். அதன் காரணமாகவே வீக்கம் உண்டாகிறது.

    களைப்பு: கடினமான வேலைகளை செய்யும்போது களைப்பு, சோர்வு ஏற்படுவது இயல்பானது. வழக்கத்தைவிட வேகமான செயல்பாடுகளில் ஈடுபடும்போது இதய துடிப்பு அதிகரிக்கும். அப்போது சீரற்ற சுவாசம் நிகழும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அப்படி அல்லாமல் அடிக்கடி களைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதுதான் அதற்கு காரண மாகும். ரத்த ஓட்ட செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவும்போதுதான் ஆக்சிஜன் அளவு குறையும். அதனை கருத்தில் கொண்டு சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    செரிமானம்: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் இரைப்பை குடல் பாதையில் ரத்தத்தின் செயல்பாடு குறைந்துபோய்விடும். அதன் தாக்கம் செரிமானத்தில் பிரதி பலிக்கும். வழக்கத்தைவிட செரிமானம் மந்தகதியில் நடைபெறும். மலச்சிக்கல் பிரச் சினையையும் அனுபவிக்க நேரிடும்.

    நோய் எதிர்ப்பு சக்தி: ரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் உள்ளுறுப்புகளை தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் கட்டமைப்பு பலவீனமடைந்துவிடும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோய்விடும். அதன் காரணமாக, ஏதேனும் ஒரு உடல்நல குறைபாட்டால் அடிக்கடி அவதிப்பட நேரிடும்.

    ஞாபக மறதி: மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்வது அவசியமானது. உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இல்லை என்றால் மூளையின் செயல் பாடும் குறைந்துபோய்விடும். கவன சிதறல், ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    பசியின்மை: ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்தால் பசியிலும் அதன் தாக்கத்தை உணரலாம். அடிக்கடி பசியின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருப்பதும் ஒருவகையில் காரணமாக அமைந்திருக்கும்.

    சரும நிறம்: உடலில் உள்ள திசுக்களுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் சருமத்தின் நிறத்தில் மாற்றம் தென்படும். குறிப்பாக கருஞ்சிவப்பு அல்லது நீல நிறத்தில் சருமம் காட்சியளிக்க தொடங்கும். விரல்கள், குதிகால்களில் வலி, நகங்கள் பலவீனமடைதல், நகங்கள் உடைதல், முடி உதிர்தல் போன்றவையும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.

    • காலை வேளையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
    • உங்களுக்குப் பிடித்த சூப் தயாரித்து சாப்பிடுங்கள்.

    வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட நம்மை குளிர்விக்க மழைக்காலம் வந்து விட்டது. மழை பொழியும் சத்தமும், மிதமான குளிர்ச்சியும் நமக்கிருக்கும் வேலைகளையும் மீறி, லேசான உறக்க நிலைக்கு அழைத்துச் செல்லும். செய்து கொண்டிருக்கும் பணிகளில் சற்றே சலிப்பை ஏற்படுத்தி, 'ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்குமே' என்ற மனநிலையை உருவாக்கிவிடும். பருவ மழைக்காலத்தின்போது பலரும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

    இதற்கு பின்னால், சில அறிவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. நமது உணர்ச்சி நிலை, மழையின் ஒலி, ஈரப்பதத்தின் அளவு மற்றும் புற ஊதா ஒளியின் பற்றாக்குறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும். மழையின் சத்தம் மனிதர்களால் கேட்கக்கூடிய, பல்வேறு அதிர்வெண்களின் கலவையான 'பிங்க் சத்தம்' எனும் ஒலியை உருவாக்குகிறது. அந்த அதிர்வெண்களில் நடக்கும் வெவ்வேறு ஆற்றல் விநியோகம், நம்மை தூக்கம் மற்றும் ஓய்வு நிலைக்கு கொண்டு செல்கிறது. இதை மாற்றி சுறுசுறுப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் இதோ:

     நீங்கள் இருக்கும் அறைகளில் பிரகாசமான ஒளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கையான வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்க முயற்சி செய்யுங்கள்.

     மழைக்காலத்தில் அறையில் ஒளி குறைவாக இருப்பது, மேலும் மந்த நிலையை உருவாக்கும். எனவே ஜன்னல்களை மூடியிருக்கும் திரைசீலைகளை திறந்து, வெளிச்சம் உள்ளே வரும்படி செய்யுங்கள்.

     மழைக்காலத்தின் குளிர்ச்சிக்கு இதமாக இரவு உடையோடு போர்வையை போர்த்திக்கொண்டு இருந்தால், தூங்கும் மனநிலையே அதிகரிக்கும். எனவே சரியான உடையை அணிந்து ஒப்பனை செய்து கொள்ளுங்கள். இது மந்தநிலையை மாற்றுவதற்கு உதவும்.

     காலை வேளையில் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும். மதிய உணவுக்குப் பின்னர் சிறிது நேரம் உங்கள் வீட்டை அல்லது அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடு மனதை விழிப்புணர்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும்.

     உங்களுக்குப் பிடித்த சூப் தயாரித்து சாப்பிடுங்கள். மழைக்காலத்தின் குளிர்ச்சியான நிலையில் சூப் பருகும்போது, அதில் உள்ள காரமும், மணமும் சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

     ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள். ஒரே வேலையில் தொடர்ந்து ஈடுபடாமல், அவ்வப்போது இடைவெளி எடுத்து பிடித்த வேலைகளை செய்யுங்கள். படைப்பாற்றல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, மனதை புத்துணர்வோடு இருக்க செய்யும் 'செரடோனின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும்.

     சுறுசுறுப்பான இசையைக் கொண்ட பாடல்களை கேளுங்கள். அது உங்கள் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டது.

     அவசரப் பணிகள் எதுவும் இல்லையென்றால், 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும்.

    • மனித உடலில் எலும்பு தொடர்பான நோய்கள் நிறைய உள்ளன.
    • மனித உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால்தான் உடல் உறுதியாக இருக்கும்.

    'ஓஸ்டியோபோரோஸிஸ்' என்பது எலும்பு புரை நோய். இந்த நோய் எலும்பை கொஞ்சம், கொஞ்சமாக உருக்குவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. அவற்றோடு கழுத்து மற்றும் முதுகுவலியையும் உருவாக்கும்.

    இந்த 'ஓஸ்டியோபோரோஸிஸ்' நோய் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிக அளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் இறுதி நாட்களின்போது அதாவது 'மெேனாபாஸ்' காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது அதிக அளவில் பாதிக்கிறது. ஆரம்பகட்ட அறிகுறிகளை தெரிந்து கொண்டவுடன் உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்காலத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகுவலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரண பிரச்சினையாக மாறி விட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர்.

    இதனை தடுக்க என்ன செய்யலாம்?. எலும்புப்புரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எலும்பு முறிவு சிறப்பு நிபுணர் டாக்டர் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தை இங்கே காண்போம்!

    எலும்பு புரை நோய்

    மனித உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால்தான் உடல் உறுதியாக இருக்கும். எலும்புகள் அடர்த்தி குறைந்தாலோ, தேய்மானம் அடைந்தாலோ உடல் வலுவின்றி உயிர் இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும்.

    மனித உடலில் எலும்பு தொடர்பான நோய்கள் நிறைய உள்ளன. 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்' என்பதுபோல எலும்பில் உள்ள பிரச்சினைகளை முதலில் அறிந்து அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

    பொதுவாக 40 வயதை கடந்த ஆண், பெண் என இரு பாலரையும் எலும்பு புரைநோய் அதிகம் தாக்குகிறது. மூன்றில் ஒரு பெண்ணுக்கும், ஐந்தில் ஒரு ஆணுக்கும் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு சொல்கிறது.

    மாதவிலக்கு பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையை நீக்கும்போது ஹார்மோன் சுரப்பிகள் சுரக்காமல் நின்று விடும். அப்போது பெண்களுக்கு இந்த எலும்பு புரை நோய் ஏற்படும். அதேபோல சிறுவயதிலேயே புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட பழக்கங்களைகொண்ட ஆண்களையும் இந்த நோய் எளிதில் தாக்கும். நோய் தாக்கியவர்களின் எலும்புகள் அடர்த்தி குறையும்.

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு புரை நோய் எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் செரிமான கோளாறு காரணமாக உட்கொள்ளும் உணவில் உள்ள கால்சியம் உடலில் சேராமல் இருத்தல், டாக்டரின் அறிவுரை இல்லாமல் 'ஸ்டீராய்டு' மாத்திரைகளை சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களினாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.

    எளிதில் உடையும் எலும்புகள்

    மனித உடலில் பெரும்பாலும் குறுக்கு தண்டுவடம், இடுப்பு, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் எளிதில் உடையும் தன்மைகொண்டவை. தண்டுவட எலும்பு உடையும்போது கால்கள் செயல்படாமல் பக்கவாதம் ஏற்படும். எனவே எலும்புகளை பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும்.

    தற்போதுள்ள உணவு பழக்க முறைக்கு நம் உடலை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 40 வயதானவர்கள் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை செய்வது போல 'டெசா' என்னும் எலும்பு பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

    நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நம் அன்றாட வாழ்வில் எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் எலும்பு புரை நோயை கட்டுப்படுத்தலாம். அதிகாலை வெயில் உடலில் படும்படி இருந்தால், வைட்டமின் 'டி' சத்து உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாது. எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் நடைப்பயிற்சி செய்வது, தண்டால் எடுப்பது உள்ளிட்ட எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.

    இதுதவிர பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். ராகி, கேப்பை உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி வைட்டமின் 'டி', கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானதாகும்.
    • சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள்.

    ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகிவிட்டனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள். உடல் நலத்தை சீராக பராமரிப்பதற்கு இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகுவதுதான் சிறப்பானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.

    செரிமானத்தை மேம்படுத்தும்

    காலையில் வெதுவெதுப்பான நீரை பருகுவது, உணவுக் குழாயில் முந்தைய நாள் முழுவதும் உட்கொள்ளப்பட்ட உணவுகளின் அனைத்து எச்சங்களையும் அகற்ற உதவும். அத்துடன் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் வழிவகுக்கும். எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகளை சாப்பிட்டிருந்தால் செரிமான செயல்முறையை எளிதாக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.

    எடை குறைப்புக்கு வித்திடும்

    உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் உடலின் வெப்பநிலையை உயர்த்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும். அதிக கொழுப்பை எரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும். வெதுவெதுப்பான நீருடன் சில துளிகள் எலுமிச்சை சாறும் கலந்து பருகலாம்.

    உடலின் பி.எச்.அளவை பராமரிக்க உதவும்

    உடலுக்கு தேவையான பி.எச். அளவை பராமரிக்க தொடர்ந்து வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது அவசியமானது. செரிமான செயல்முறையின்போது அஸ்கார்பிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் எளிதில் ஜீரணமாகிவிடும். அதனை ஈடு செய்து பி.எச் அளவை நிர்வகிக்க வெதுவெதுப்பான நீர் துணைபுரியும்.

    நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்

    ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றின் செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும். இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுபவை. வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் அவற்றை விரைவாக உறிஞ்சுவதற்கும் உதவும்.

    சரும செல்களை பாதுகாக்கும்

    உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானதாகும். வெதுவெதுப்பான நீர், உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை தக்கவைக்கக்கூடியது. உடலில் நச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதால்தான் எளிதில் நோய்வாய்ப்படுவது, விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யவும் உதவும்.

    • தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்க்கும்.
    • புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

    உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்வகிப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள், அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவது சிறுநீகரத்தின் முக்கியமான பணியாகும். இந்த கழிவு பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.

    உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணைபுரிகின்றன. ஆகையால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமானது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உதவும் பயனுள்ள விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    1. திரவ உணவை உண்ணுங்கள்:

    தினமும் எந்த அளவுக்கு திரவ உணவுகளை உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், பழ ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்களை பருகுவதும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும்.

    2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்:

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். சிறுநீரக நோய் ஏற்படுவதையும் தவிர்க்கும். ரத்த அழுத்த அளவை குறைக்கவும் வித்திடும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம் கூட சிறுநீரகங்களுக்கு சிறந்தது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.

    3. புகைப்பழக்கம் மற்றும்  மதுப் பழக்கத்தை தவிருங்கள்:

    புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வீரியம் குறைந்துவிடும். சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதுபோல் மதுப்பழக்கமும் சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலிருக்கும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இறுதியில் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும்.

    4. ஆரோக்கியமான உணவை  உண்ணுங்கள்:

    அன்றாட உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் சீராக உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்க உதவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் காக்க துணைபுரியும்.

    5. உப்பின் அளவை குறையுங்கள்:

    உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியமானது. உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கல் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறு நீரில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்தால் நிலைமை மோசமாகக்கூடும்.

    6. பரிசோதனை மேற்கொள்ளுங்கள்:

    சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழி, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் தவறாமல் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    • ‘காட்டன் பட்ஸ்’ கொண்டு காதுகளை மூடுவதும் நல்லது.
    • வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு சாதகமானது.

    காதில் வலி, இரைச்சல், சிவந்து போகுதல், திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால், அவை காதில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குளிர், சைனஸ், காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்றவையும் காதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும். வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு சாதகமானது. பெரியவர்களுடன் ஒப்பிடும்போது சிறுவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

    இந்த தொற்றால் காது வலி தோன்றும். குளிர்ந்த காற்றால் வலி அதிகரிக்கும். முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கேள்வித்திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

    காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

    * குளிர்ந்த காற்று வீசும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல நேர்ந்தால் வெப்பத்தை தக்க வைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். 'காட்டன் பட்ஸ்' கொண்டு காதுகளை மூடுவதும் நல்லது.

    * புகைப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும்போது காது குழாய்கள் வீக்கமடையும். அது காதுவலிக்கு வித்திடும். காதில் தொற்று ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

    * செல்போனில் பேச இயர் போனை அதிக நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மணிக்கணக்கில் இசை கேட்பதும் நல்லதல்ல. அதுவும் காதுவலிக்கு வழிவகுத்துவிடும்.

    * பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் இன்றியமையாதது. குழந்தைகளுக்கு எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருக்கிறது. காதில் ஏற்படும் தொற்றுவில் இருந்தும் குழந்தைகளை தாய்ப்பால் பாதுகாக்கும்.

    • எல்லா பொருட்களையும் பிரீசரில் வைக்கக்கூடாது.
    • பால், பால் சார்ந்த பொருட்களை பிரீசரில் வைப்பது தவறானது.

    கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பீதியால் நிறைய பேர் அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி சேமித்து வைக்கிறார்கள். அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரிட்ஜிலும், அதிலிருக்கும் பிரீசரிலும் அடுக்கிவைக்கிறார்கள். பிரிட்ஜில் இருக்கும் 'ரேக்குகளை' விட உள்பகுதியில் இருக்கும் பிரீசரில் குளிர்ச்சி தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் அதில் விரைவாக கெட்டுப்போகும் பொருட்களை சிலர் பாதுகாப்பாக வைக்கிறார்கள். அப்படி எல்லா பொருட்களையும் பிரீசரில் வைக்கக்கூடாது.

    பால், பால் சார்ந்த பொருட்கள் சட்டென்று கெட்டுவிடும் என்பதற்காக அதை பிரீசரில் வைப்பது தவறானது. ஏனெனில் அவை குளிர்ந்து உறைந்துபோய்விடும். பாலை அதில் வைத்து எடுத்து காய்ச்சினால் உருகிபோய்விடும். பால் பொருட்களை பிரீசரில் வைப்பதால் அதன் ஆயுள் அதிகரிக்காது.

    பழங்களை பிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு குறைந்துபோய்விடும். பழங்களின் மேல் பகுதியும், சுவையும் மாறி போய்விடும். உலர் பழவகைகளை வேண்டுமானால் பிரீசரில் வைக்கலாம்.

    தக்காளி, மிளகாய் போன்ற சாஸ் வகைகளை பிரீசரில் வைக்கக்கூடாது. அதில் கலந்திருக்கும் மூலப்பொருட்களெல்லாம் தனித்தனியாக பிரிந்துவந்துவிடும்.

    பாக்கெட்டில் இருந்து எடுத்து பயன்படுத்திய காபி தூளை பிரீசரில் வைக்கக்கூடாது. அதன் சுவையும், மணமும் குறைந்துபோய்விடும். உபயோகிக்காத காபி தூள் பாக்கெட்டை இரண்டு வாரம் வரை பிரீசரில் வைத்துக்கொள்ளலாம்.

    நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் பிரீசரில் வைத்து பயன்படுத்தக்கூடாது. அது குளிர்ந்து போய் மென்மை தன்மைக்கு மாறி போய்விடும். அதன் ருசியும் மாறுபட்டுவிடும்.

    வெள்ளரிக்காயை பிரீசரில் வைத்து சாப்பிடக்கூடாது. அதன் சுவையும், ஊட்டச்சத்து தன்மையும் மாறிப்போய்விடும். கண்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் பிரீசரில் வைத்துக்கொள்ளலாம்.

    வறுத்த உணவு தானியங்களை பிரீசரில் வைக்கக்கூடாது. அவற்றின் மொறுமொறு தன்மையும், சுவையும் குறைந்துபோய்விடும்.

    கீரை வகைகளை பிரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அவற்றின் தன்மை மாறாது.

    காலிபிளவரில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். கலோரிகளும் குறைவு. அதனை பிரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

    குடைமிளகாயில் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது. அதனையும் பிரீசரில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

    • கண்களில் ஏற்படும் வறட்சி தலைவலியை உருவாக்கும்.
    • அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம்.

    நவீன தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், கண்கள் பாதுகாப்பு என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது. கண்களில் உருவாகும் வறட்சி காரணமாக நமது கவனம் சிதறுவதுடன், தலைவலியும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து விடுபட கீழ்கண்ட எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இவை பொதுவான வழிமுறைகள் மட்டுமே. முறையான ஆலோசனைக்கு மருத்துவரை தொடர்பு கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

    இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், கணினி, செல்போன், டி.வி., பார்த்து விட்டு தூங்குவது போன்ற செயல்களால் கண்கள் மிகவும் பாதிப்படைகின்றன. அதனால், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஏற்பட்டு வறட்சி ஏற்படுகிறது. தினமும் எட்டு மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவு, ஓய்வு ஆகிய மூன்றையும் சரியாக கடைப்பிடித்தால் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

    எதிர்பாராத சூழ்நிலையில் கண்களில் தூசி விழுந்தால், தூய்மையான குளிர்ந்த நீரால் மட்டுமே கண்களை கழுவ வேண்டும். அந்த சமயத்தில் கண்களில் எண்ணெய் அல்லது சுய மருத்துவ முறையில்ஏதாவது சொட்டு மருந்தை விடுவது போன்றவை ஆபத்தானது. தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றை போதிய புற வெளிச்சம் உள்ள சூழ்நிலையில் மட்டுமே பார்க்க வேண்டும்.

    இருட்டில் பார்க்கும்போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு விழிப்படலத்தை பாதிக்கும். கணினியின் திரையை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ்ப்புறமாக அமையும்படி வைக்க வேண்டும். தொடர்ந்து கணினியை இயக்குபவர்கள் 20/20 என்ற முறையை கடைப்பிடிக்கலாம். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டுவதாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.

    கோடை காலத்தில் உடலிலும், கண்களிலும் வறட்சி ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். மருத்துவர் ஆலோசனைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சூடு விலகி, கண்கள் குளிர்ச்சி அடையும். கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.

    சிக்கன், மட்டன் போன்றவற்றை தவிர்த்து கடல் உணவுகளான மீன், இறால், போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். மீன் உணவுகள் கண்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகின்றன. அதனால் கண் பார்வை குறைபாடுகள் குணமாகும். பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கிய பொருட்கள்.

    வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவுப் பொருட் களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை கீரையை சமைத்து சாப்பிடலாம். பல்வேறு நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    • இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    • ஏ பி பாஸிட்டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது.

    நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள், பிளாஸ்மா ஆகியவை உள்ளன. ரத்தத்திலுள்ள ஆன்டிஜென்கள் அடிப்படையில் ரத்தவகை பிரிக்கப்படுகிறது. இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    'ஏ' குரூப்பில் சிவப்பணுக்களில் ஏ புரதமும், பிளாஸ்மாவில் பி ஆன்டிபாடியும் (antibody) இருக்கும். 'பி' குரூப்பில் மேற்சொன் னது மாறி இருக்கும். 'ஏ,பி' குரூப்பில் சிவப்பணுக்களில் 'ஏ,பி புரதம்' இரு அணுக்களிலும் உண்டு; ஆனால் பிளாஸ்மாவில் ஏ அல்லது பி இருக்கும்.

    'ஓ' குரூப்பில் ஏ அல்லது பி புரதம் சிவப்பணுக்களிலும், பிளாஸ்மாவில் இரு ஆன்டிபாடிகளும் இருக்கும். இதில் கூடுதலாக உள்ள புரதத்தை (Rh) வைத்து ரத்தவகை பாசிட்டிவ், நெகட்டிவ் என பிரிக்கிறார்கள்.

    ஏ பி நெகட்டிவ் மிகவும் அரிய ரத்த வகை. உலகில் ஏ பி நெகட்டிவ் 0.6 சதவிகிதம் பேருக்கு மட்டுமே (தோராயமாக 167 பேரில் ஒருவருக்கு) உள்ளது. ஏ பி பாஸிட்டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது. இந்தியாவில் சத்தீஸ்கர், மேகாலயா, உத்தரபிரதேசம் அருணாசலப்பிரதேசத்தில் ரத்த தானத்திற்கு 50 சதவிகிதம் தேவையுள்ளது.

    • நமது ரத்தம் ஒரு நாளில் 60 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்கிறது.
    • மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

    * மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

    * மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

    * ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

    * மனித உடலில் மிகவும் பலமான பகுதி, விரல் நகங்களே. நம் நகங்களில் கெராடின் சத்து உள்ளது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது. மரணத்திற்குப் பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

    * நமது ரத்தம் ஒரு நாளில் 60 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்கிறது.

    * நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

    * ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

    * கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

    * மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

    * 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

    * கண் தானத்தில் கருவிழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

    • மனது சரியாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும்.
    • உடல் புத்துணர்ச்சி பெறுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

    தினசரி வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையாக இருப்பது முக்கியமானது. காலையில் எழும் போது நாம் செய்யும் சில செயல்கள் இந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். இசைக்கலைஞர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் போன்றோர் தொடர்ந்து பயிற்சி எடுத்து தங்களை மேம்படுத்தி வெற்றிபெறுவார்கள். அதை போலவே மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் நாள் முழுவதும்நல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் காலையில் எழும்போது மகிழ்ச்சியான நேர்மறை எண்ணங்களை தூண்டுவது அவசியமானது.

    படுக்கையை விட்டு எழும்போது விரிப்புகளை ஒழுங்குபடுத்துவது எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருக்க உதவும். படுக்கை ஒழுங்காகவும், அழகாகவும் இருப்பது மனதுக்கு அற்புதமான உணர்வை தந்து காலை பொழுதை அழகாக்கும்.

    காலையில் சுற்றுச்சூழல் மிகவும் அமைதியாக இருக்கும். இந்த நேரத்தில் நேர்மறை ஆற்றல் வளிமண்டலத்தில் பரவும். எனவே காலையில் எழுந்தவுடன் தோட்டத்தில் நடப்பது, எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது போன்றவைற்றை வழக்கமாக்கி கொள்ளவும். இது நம் உடலை புத்துணர்வாக வைப்பதற்கு உதவும்.

    உடல் புத்துணர்ச்சி பெறுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்ணுங்கள். காலை உணவுதான் அன்றைய நாளுக்குரிய ஆற்றலின் முக்கிய ஆதாரம். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.

    இன்று நாம் என்ன செய்ய வேண்டும். என்பதை முன்போ முடிவு செய்து வேலையை தொடங்குவது நல்லது. எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை ஆரம்பிப்பது, பெரும்பாலான பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் மனதும், உடலும் சோர்வடையும்.

    நேரம் இருக்கும் போது பிடித்தமான இசை, பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்கலாம். இது அந்த நாளை பயனுள்ளதாக மாற்றும். மனது சரியாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும்.

    ஒவ்வொரு நாளும் 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நல்ல முறையில் நேரம் செலவிடுவது உளவியல் ரீதியாக நம்மை மேம்படுத்தும்.

    விழித்திருக்கும் நேரம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தூங்குவதும் முக்கியம். மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு 8 மணிநேரம் தூக்கம் அவசியம்.

    மேற்சொன்னவற்றை எல்லாம் கடைப்பிடித்தால் நீண்ட ஆரோக்கியத்துடனும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

    • நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
    • தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது.

    நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.

    இதில் மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவு நாம் ரசித்து உண்ண வேண்டும் என்றால் நமக்கு அது பிடித்த உணவாக இருக்க வேண்டும். பிடித்த உணவாக இருக்கும்போது நம் வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் மேலும் நாம் நமக்கு பிடித்த உணவை சுவைத்து உண்ணும் போது போதுமான அளவுக்கு நன்கு உணவை வாயில் அரைத்து உண்போம்.

    இவ்வாறு உண்ணும் போது கிட்டத்தட்ட உணவு வாயிலேயே பாதி அளவுக்கு ஜீரணமாக கூடிய நிலையில் இருக்கும். மேலும் ஏனோ தானோ என்று உணவை மென்று முழங்குவதை விட ரசித்து ருசித்து உண்ணும் போதும் நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் உடலுக்கு போதுமான தெம்பை மனம் அளிக்கும். நம்முடைய தினப்படி செயல்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் போதுமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களும் சுரக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மனம் உடலோடு நேரடியாக தொடர்புடையது. உள்ளத்தின் ஆரோக்கியம் உடலின் பூரண ஆரோக்கியத்தை அழைத்து வரும் என்றால் மிகை இல்லை. ஒருவர் என்ன மாதிரியான உணவுகள் தன் உடலுக்கு ஒத்துப் போகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கால நேரத்துடன் அளவான பிடித்த உணவை சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனலாம். நம் தினப்படி வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது. நாம் நிறைய வாட்ஸப் காணொளிகள் மற்றும் பதிவுகளில் பார்க்கின்றோம். இவைகளில் வரக்கூடிய தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் கூட அரைகுறையாக ஏதேனும் பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவர்கள் ஆலோசனை அவசியம்.

    ×