search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட்"

    • உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று CAG அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
    • ரூ.13.86 கோடியை காடு வளர்ப்புக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.

    உத்தரக்காண்டில் காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஐபோன்கள், மடிக்கணினிகள், குளிர்சாதன பெட்டிகள் வாங்குவதற்காகவும், கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும் பயன்படுத்தியது உட்பட பல நிதி முறைகேடுகள் CAG அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

    உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையில், தொழிலாளர் நல வாரியம் 2017 முதல் 2021 வரை அரசாங்கத்தின் அனுமதியின்றி ரூ.607 கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வன நிலத்தை மாற்றுவதற்கான விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    வனப்பகுதிகள் வளர்ப்புக்கான இழப்பீடு, மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம் (CAMPA) தரவுகளின்படி, 2019-22 வரை காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.13.86 கோடியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. தனியார் ஏஜென்சிகள் மூலமாக, 188.6 ஏக்கர் வன நிலங்களை வனம் சார்ந்து அல்லாத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டதாக 52 வழக்குகள் பதிவாகியுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

    காடுகளில் நடப்படும் மரங்களில் 60-65% மரங்கள் வளரவேண்டும் என்று வன ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், உத்தர்காண்டில் 2017-22 ஆம் ஆண்டில் நடப்பட்ட மரங்களில் 33% மட்டுமே வளர்ந்துள்ளது.

    CAG அறிக்கையை எடுத்துக்காட்டில் அரசாங்கத்தின் நிதியை பாஜக அரசு வீணடிக்க காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    உத்தரகண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியல் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி உத்தரகாண்ட் முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட் சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது. 

    புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும்  என்பதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தமது பதவியை ராஜினாமா செய்தார். 

    இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில்  புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் புஷ்கர்சிங் தாமி முன்னிலை பெற்றார்.  13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தாமி 57,268 வாக்குகளும், கஹ்டோரி 3,147 வாக்குகளும் பெற்றிருந்தனர். 

    வாக்கு எண்ணிக்கை முடிவில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புஷ்கர்சிங் தாமி முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார்.  

    தமது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமி, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், தமது ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். 

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் இடைத்தேர்தலில் வாக்குகள் மூலம் நீங்கள் (வாக்காளர்கள்)  கொடுத்த அன்பு மற்றும் ஆசீர்வாதத்தால் என் இதயம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டது, நான் அமைதியாக இருக்கிறேன் என்றும் அவர்  தெரிவித்தார்.

    இந்நிலையில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் புஷ்கர்சிங் தாமி புதிய சாதனை படைத்துள்ளதாகவும், இதற்காக பாராட்டுவதாகவும், பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
     
    ×