என் மலர்
நீங்கள் தேடியது "tag 147562"
சேலத்தில் கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
சேலம்:
சேலம் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாதாரம் (வயது 52) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் கடந்த 3 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை நேரம் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6:45 அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஜெயராமை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாபேட்டை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது அதன்படி பணத்தைச் செலுத்திய பிறகு ஜாமீனில் வெளிவந்த வந்தனர்.
இதன் பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்த பிரான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு போலீசார் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
ஜாமினில் வெளி வந்த இவர் கடந்த 20 நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்துப் போட்டு வந்தார். ஆனால் நேற்று இவர் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கடத்தல் நடத்தி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் போலீசாரிடம் பிடிபட்ட லாரி உரிமையாளரான சுரேஷ் அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் மர்மநபர்கள் ஜெயராம் பெங்களூருக்கு கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. போலீசார் நெருக்கடி காரணமாக ஜெயராமனை ஒப்படைத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது.
ஆனாலும் ஜெயராம் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
சென்னை:
சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் தண்டவாள பாயிண்ட் பராமரிப்பு பணி நள்ளிரவு முதல் நடைபெற்றது. இந்த பணியை அதிகாலைக்குள் முடிப்பதற்கு தொழில் நுட்ப பணியாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அந்த பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. பணியை முடிக்க நேரம் நீடித்ததால் எழும்பூர் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், மலைக்கோட்டை ஆகிய ரெயில்கள் வந்து சேர்ந்தன. அதன் பின்னர் வந்த தென்மாவட்ட ரெயில்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தை பிரித்து ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் ரெயில்களை அனுப்பக் கூடிய ‘பாயிண்ட்’ சரி செய்யும் பணி முடிப்பதற்கு நேரம் அதிகமானதால் ரெயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கூடுவாஞ்சேரியிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் காட்டாங்கொளத்தூரிலும், ராமேஸ்வரம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி ஆகிய ரெயில்கள் வழியிலும் நிறுத்தப்பட்டன.
ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்ட பின்னர் எப்போது புறப்படும், எதற்காக நிறுத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் நிர்வாகம் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விட்டு மின்சார ரெயிலில் ஏறி தாம்பரம், எழும்பூருக்கு சென்றனர்.
நெல்லை எக்ஸ்பிரசில் 150 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்தனர். அவர்களை அந்த ரெயிலில் வந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி மின்சார ரெயிலில் ஏற்றி விட்டனர். தாம்பரம் ரெயில் நிலையத்திலும் அவர்களை பாதுகாப்பாக இறக்கி விட்டனர்.
இதற்கிடையில் பராமரிப்பு பணி விரைவாக முடிக்கப்பட்டு ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஆனாலும் வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றாதது ஏன்? என திகார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NirbhayaMurderCase #DCW
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்த பெண் 13 நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தாமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை எதிர்த்து 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. அவர்களது மேல்முறையீட்டு மனுவில் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அவர்களது மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தது. ஆனால், தற்போது வரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என டெல்லி மகளிர் ஆணையம் திகார் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #NirbhayaMurderCase #DCW

மானாமதுரை பகுதியில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:
மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறுவதற்காக சிறு கிராமங்களில் கூட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்த ஊராட்சிக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வருவது இல்லை என புகார் எழுந்துள்ளது.
ஒரு பள்ளியில் 2ஆசிரியர்கள் பணியாற்றினால் அதில் ஒருவர் மட்டும் பணிக்கு வருவது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளியின் கதவு சாவியை உள்ளூரில் உள்ள மாணவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதையடுத்து அந்த மாணவர்கள் காலை நேரத்தில் வந்து அந்த பள்ளியை திறப்பது, வகுப்பு நேரம் முடிந்தவுடன் பின்னர் அந்த பள்ளியை மூடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமைஆசிரியர் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் நடைமுறை உள்ளது. ஆனால் மானாமதுரை பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் காலை 10 மணிக்கு மேல்தான் ஆசிரியர்கள் பணிக்கு வருகின்றனர். அதன் பின்னர் அந்த பள்ளியில் முறையான இறை வணக்கம் கூட நடத்துவது இல்லை. பின்னர் மாலை 3 மணிக்கு பள்ளியில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களும் புறப்பட்டு சென்று விடுவாதாக கூறப்படுகிறது. இதனால் இதுபோன்று உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மானாமதுரை மற்றும் அதன் கிராமப்புற பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவனுக்கு தாய் மொழியான தமிழைக்கூட வாசிக்க திணறும் அளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உள்ளது. மேலும் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் கிராமத்தில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது 26 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினந்தோறும் கால தாமதமாக வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று காலை 9.40 மணி வரை இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் காலை முதல் ஆசிரியர்களின் வருகைக்காக பள்ளி வாசலில் காத்திருந்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிவர ஆய்வு நடத்துவது இல்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த காரணத்தினால் கிராமப்புறத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் அந்த பள்ளிகளுக்கு வருவது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுபோல் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து சென்று சரியான நேரத்திற்குள் ஆசிரியர்கள் அங்கு வருகின்றார்களா என்று ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்கள் தாமதமானால் பயணிகள் வசதிக்காக இழப்பு நேரத்தை சரிகட்ட தற்போதைய வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ரெயில்களை இயக்க எஞ்சின் டிரைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Railways
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றான இந்திய ரெயில்வே நாளொன்றுக்கு சராசரியாக 2.5 கோடி பயணிகளை கையாளுகிறது. இது ஆஸ்திரேலியா நாட்டின் மக்கள் தொகைக்கு சமமான ஒன்றாகும். இந்நிலையில், கடந்த ஓராண்டில் 30 சதவிகித ரெயில்கள் தாமதமாக வந்துள்ளன.
ரெயில்கள் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்பட்டாலும், பயணிகள் இந்த தாமதத்தால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சங்கிலித்தொடர் போல இந்த தாமதம் அவர்களின் திட்டங்களிலும் இடையூறை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு ரெயில் தாமதமானால் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் அந்த ரெயிலை இயக்க எஞ்சின் டிரைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரெயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ என எடுத்துக்கொண்டால், அந்த ரெயில் சராசரியாக 80 முதல் 90 கி.மீ வேகத்தில் இயங்கும். இது போக, குறிப்பிட்ட வழித்தடத்தில் ரெயில்கள் இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிகளும் இருக்கும்.
அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ரெயிலை இயக்கினால் தண்டனை என்ற நிலை இருந்ததால், எஞ்சின் டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கூட நெருங்காமலே ரெயிலை ஓட்டி வந்தனர்.
தற்போது, தாமதமாகும் ரெயில்களின் இழப்பு நேரத்தை சரிகட்ட அனுமதிக்கப்பட்ட வேகத்தை நெருங்க எஞ்சின் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ரெயிலின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 110 கி.மீ என்றால் 105 கி.மீ வேகம் வரை தேவைக்கேற்ப செல்லலாம்.
இந்த புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானம் இன்று தாமதமானதால், ஆத்திரமடைந்த பயணி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #manharmsself #flightdelay
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மும்பை செல்வதற்கான விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்துக்காக காத்திருந்த பயணி ஒருவர், விமானத்தின் தாமதம் குறித்து விமான நிலைய பணியாளர்களிடம் கேட்டுள்ளார். இது அவர்களிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆத்திரமடைந்த பயணி, தான் வைத்திருந்த பேனாவை எடுத்து தன்னைத் தானே தாக்கி காயப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அந்த பயணியை விமான நிலைய அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பயணி மது அருந்தி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. #manharmsself #flightdelay