என் மலர்
நீங்கள் தேடியது "பெற்றோர்கள்"
- சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
- சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்
பெற்ற பிள்ளைகள் சோறு போடாமல் அடித்து துன்புறுத்தியதால் வயதான தாய்-தந்தை ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஹாசாரிராம் பிஸ்னாய் [70 வயது] மற்றும் அவரது, மனைவி சாவ்லி தேவி [68 வயது]. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.
அதில், 'மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது.
- குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.
குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் அன்பும், உணர்ச்சியும் கலந்த வலுவான பந்தத்தை கட்டமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வேலை, தொழில் நிமித்தமாக குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவளிக்க முடிவதில்லை.

எவ்வளவு பிசியானவராக இருந்தாலும் தூங்கச் செல்வதற்கு முன்பாவது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போது சில விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.
வலுவான பந்தம்
பெரும்பாலானவர்களுக்கு இரவில் தூங்க செல்வதற்கு முந்தைய நேரம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏற்புடையதாகவே இருக்கும். அந்த நேரத்தை டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்ற வேறு வகையில் செலவிடாமல் குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் நேர்மறையான விஷயங்களை மட்டுமே குழந்தைகளிடம் பேச வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் தூக்கத்தை பாதித்து, மன ரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எதிர்கால கவலை
தூங்கச் செல்வதற்கு முன்பு பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதிர்கால கவலைகளை பற்றி பேசக்கூடாது. அது அவர்களை கவலையடைய செய்வதுடன் தூக்கத்தையும் பாதிக்கும்.
தண்டனை
தூங்கும் முன்பு குழந்தைகளை தண்டிப்பதையும், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அவர்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர செய்யும் விதமாக நேர்மறையான கருத்துக்களை பேச வேண்டும்.

ஒப்பிடுதல்
தூங்கும் முன்பு குழந்தைகளுடன் பேசும்போது தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. அது தன்னை தானே தாழ்த்திக்கொள்ள வழிவகை செய்துவிடும்.
மற்றவர்களுடன் ஒப்பிடாமல் அவர்களின் தனித்துவமான தனித்திறன்களைப் பற்றி பேச வேண்டும். அதனை மெருகேற்றுவதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். அவர்களின் திறமைகளை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

பொய் வாக்குறுதி
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வேலையை கொடுத்து அதனை நிறைவேற்றிக்கொடுத்தால் பரிசு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. அவர்களை நம்ப வைத்து வேலை வாங்குவதும், அந்த வேலையை செய்து முடித்த பின்பு எதுவும் வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றுவதும் தவறான பழக்கம்.
பெற்றோர் பிள்ளைகளிடத்தில் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளும் அதையே பின்பற்றத் தொடங்கி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

எதிர்மறையான விஷயங்கள்
தூங்கும் முன்பு குழந்தைகளின் மனதில் நேர்மறையான வார்த்தைகளை பதிய வைக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்களை சொல்வது அவர்களை மன வேதனைக்குள்ளாக்கும்.
தங்களை தாங்களே கேள்வி கேட்டு தேவையற்ற மனக்குழப்பத்திற்கு ஆளாவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மறையான கருத்துக்களை வழங்குவதும் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.
- குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
களங்கமற்ற உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் `குழந்தைகள்'. அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. எல்லா பெற்றோருமே குழந்தைகளுக்கு எல்லா விஷயத்திலும் சிறந்ததையே வழங்க விரும்புகிறார்கள்.
ஆனால் குழந்தைகள் சேட்டை செய்யும்போதோ, சொல் பேச்சை கேட்காமல் இருக்கும்போதோ அதிக கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அப்படி நடந்து கொள்வது நல்லதல்ல.

குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான கண்டிப்புகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் நீண்டகால மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான ஆய்வுக்கு, கண்டிப்புக்கு உள்ளான 7 ஆயிரத்து 500 குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கேம்பிரிட்ஜ் மற்றும் டப்ளின் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் அதிக கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக மனநலம் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் மூன்று, ஐந்து மற்றும் ஒன்பது வயது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். அதில் 10 சதவீதம் குழந்தைகள் மோசமான மனநலம் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகள் கீழ்ப்படியாதபோது அவர்களை தனிமைப்படுத்துவது, கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.
பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிக்கும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
கடுமையாக தண்டிக்கும் பெற்றோரிடத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில்தான் வாழ்கிறார்கள்.
இதன் காரணமாக குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, இந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக பெற்றோரிடம் இருந்து விலகி செல்ல முடிவு எடுக்கின்றனர்.
வீட்டில் மன இறுக்கமாக இருப்பதால் பொதுவெளியிலும், நண்பர்கள் மத்தியிலும் மன இறுக்கமானவர்களாகவே தங்களை வெளிப்படுத்துகின்றனர். கண்டிப்பான பெற்றோர்களால் சுயமரியாதையை இழந்தவர்களாக உணருகிறார்கள்.
அதிக கடுமையான விதிகள் பெற்றோர்-குழந்தை உறவுகளை சீர்குலைத்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை தடுக்கின்றன.
கல்விக்காக பெற்றோர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும்போது, அது குழந்தைகளின் மன நலனை பாதிக்கிறது. பெற்றோருக்கு பயந்து படிப்பது குழந்தைகளின் கல்வித்திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது.
கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளை சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அது அவர்களின் கனவுகளையும், படைப்பாற்றலையும் பாழ்படுத்திவிடும். இதனால் சின்ன பிரச்சனையை சந்தித்தால் கூட எவ்வாறு முடிவு எடுப்பது, எப்படி தீர்வு கண்டுபிடிப்பது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.
அதற்கு பதிலாக குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கனிவுடன் வழி நடத்தி அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
அவ்வாறு செய்யும்போது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறிவிடுவர். அதிக கட்டுப்பாடுகளுக்குள் உள்ளாகும் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை கையாள இயலாமல் மன விரக்திக்கு உள்ளாகின்றனர்.
குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் பெற்றோருடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் உருவாகின்றன. அதனால் பெற்றோர் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த வேண்டும். அன்பு, அக்கறை, சுதந்திரம் ஆகியவற்றை கொடுத்து வளர்க்க வேண்டும்.

பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். நம் குழந்தைகள் ஒழுக்கமானவர்களாக வளர வேண்டுமெனில், நாமும் அவ்வாறு இருக்க வேண்டும்.
எதிர்மறையான அணுகுமுறையை மாற்றி ஆதரவு, ஊக்கம் மற்றும் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுடன் ஒழுக்கம் நிறைந்த சூழலில் குழந்தைகளை வளர்ப்பது முக்கியம்.
பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நண்பர்களாக மாறுவோம். குழந்தைகளுடன் பாதுகாப்பான உறவை வளர்ப்பது நாம் அவர்களுக்கு வழங்கக்கூடிய மதிப்புமிக்க பரிசாகும்.
- குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.
- பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.
சென்னை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
"இன்றைய தினம், சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் இனிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை.

வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். பல துறைகள் சார்ந்த பல்வேறு புத்தகங்களை ஒரே இடத்தில் காணும்போது, குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும்.

எனவே, அனைவரும், சென்னை புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
- பிறர் முன்பு திட்டுவது குழந்தைகளின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.
குழந்தைகள் எத்தகைய குணாதிசயம், சுபாவம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதை பெற்றோரின் வளர்ப்புமுறைதான் தீர்மானிக்கிறது. அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்புணர்வோடு பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை பாதை கட்டமைக்கப்படுகிறது.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பதற்கு பெற்றோரின் வளர்ப்பில் தென்படும் குறைபாடுகளே காரணமாக அமையும். அவை குறித்தும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

குழந்தைகளை பாராட்டுவதில்லை
குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவை மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலோ, பாராட்டும்படியாக இருந்தாலோ மனதார வாழ்த்த வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்படும்படி ஊக்குவிக்க வேண்டும். அப்படி புகழ்ந்து பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
'தாம் சிறப்பாக செயல்படுகிறோம்' என்று அவர்களும் தங்களை பற்றி பெருமை கொள்வார்கள். அப்படி அல்லாமல் குழந்தைகள் எது செய்தாலும் 'இதெல்லாம் ஒரு விஷயமா?' என்று பெற்றோர் சாதாரணமாக கடந்து செல்வது ஏற்புடையதாக இருக்காது. தாம் என்ன செய்தாலும் பெற்றோர் உற்சாகப்படுத்தமாட்டார்கள் என்ற மன நிலை பிள்ளைகளை ஆட்படுத்திவிடும்.
பெற்றோர் தம்மை மதிப்பதில்லை என்ற மனநிலைக்கும் வந்துவிடுவார்கள். அது பிடிவாத குணத்தை அவர்களுக்குள் விதைப்பதற்கு அடித்தளமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர் ஊக்குவித்து கொண்டாட வேண்டும்.

மற்றவர்கள் முன்பு விமர்சனம் செய்தல்
பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவது பெற்றோரின் கடமை. அதேவேளையில் அந்த தவறை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதோ, அவர்கள் முன்பு திட்டுவதோ பிள்ளைகளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
அப்படி பிறர் முன்பு திட்டுவது அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும். பெற்றோரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் பிடிவாதம் கொண்டவர்களாக மாறுவதற்கு வித்திடக்கூடும்.
பெற்றோர் உச்சரிக்கும் எந்த வார்த்தையும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்படி அமைந்துவிடக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகள் எதுவானாலும் அவர்களிடமே நேருக்கு நேர் பேசி அதனை சரி செய்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாமல் கடுமையாக திட்டுவது மன ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெற்றோர் என்ன செய்தாலும் தம்மை கண்டிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகி, வீண் பிடிவாதம் அவர்களுக்குள் எழ வழிவகுத்துவிடும்.
அதற்கு இடம் கொடுக்காமல் சிறு வயதிலேயே அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டினால் எதையும் சுமூகமாக எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது நலம் சேர்க்கும்.
தன் நண்பர்களோ, உறவுகளோ தவறு செய்திருந்தாலும் அதனை அவர்கள் மனம் புண்படாதபடி திருத்திக்கொள்வதற்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பார்கள்.

தக்க சமயத்தில் அறிவுரை வழங்காமல் இருத்தல்
எந்தவொரு காரியத்தை குழந்தைகள் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அந்த அறிவுரை அவர்கள் தொடங்கும் காரியத்தை சிறப்பாக முடிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.
திட்டமிடுதல், இலக்கு நிர்ணயித்தல், எதிர்கொள்ளும் இடையூறுகளை சமாளித்தல் என எல்லா நிலையிலும் பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வது, 'நீ எது செய்தாலும் அது சிறப்பாக முடியாது' என்று மனம் நோகும்படி பேசுவது பெற்றோர் மீது தேவையற்ற அதிருப்தியை ஏற்படுத்தும்.
நம் உணர்வுகளை பெற்றோர் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் பிள்ளைகளை பிடிவாத குணம் கொண்டவராக மாற்றக்கூடும்.

அடிக்கடி தொந்தரவு செய்தல்
பெற்றோர் ஏதேனும் ஒரு வேலையை பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அதனை அவர்கள் நிறைவேற்றி கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அந்த வேலை பற்றிய செயல்பாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? தொடர்ந்து ஆர்வமாக வேலையை தொடர்கிறார்களா? என்று கண்காணிக்கலாம்.
ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருப்பது, 'இப்படி செய்தால்தான் சரியாக இருக்கும்' என்று கருத்து கூறுவது, வேலையில் சிறு தவறு செய்தாலும் கண்டிப்பது போன்ற செயல்பாடுகள் பிள்ளைகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும்.
அந்த வேலை மீதான ஆர்வத்தை குறைக்கக்கூடும். எப்போதும் நம்மை குறைசொல்வதுதான் பெற்றோரின் மன நிலையாக இருக்கிறது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.
அடுத்து பெற்றோர் சொல்லும் வேலையை பிடிவாதமாக மறுக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகளை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
நன்றி சொல்லாமல் இருத்தல்
பிறர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு நன்றி சொல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும்.
வயதில் சிறியவர்தானே நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடத்தில் வெளிப்படக்கூடாது. நன்றி சொல்வதற்கு வயது பொருட்டல்ல.
செய்யும் வேலை, உதவியின் தன்மைக்கேற்ப நன்றி சொல்ல முன் வர வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதற்கு பெற்றோரே 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.
அதைவிடுத்து 'இதெல்லாம் ஒரு வேலையா? இதை செய்ததற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா?' என்ற மனப்பான்மை உருவாகுவதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது.

ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்
பெற்றோரின் நடத்தைகள் எப்படி இருக்குமோ அதனை பின்பற்றித்தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனால் ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாதது என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அதுவே பின்னாளில் அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெற்றோர், குழந்தைகளிடம் இதுதொடர்பாக காவல்துறையினர் மற்றும் பிற அரசுத்துறையினர் விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாலியல் குற்றங்களை செயல்படுத்துபவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியருக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். குழந்தைகளை எளிதில் அணுகி பழகும் இவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பர்.
விளையாடுதல், பரிசு வழங்குதல், விருப்பமானதை வாங்கித்தருதல், விருப்பமான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என தாங்கள் அன்புடன் திகழ்பவர்களாக சிறுவர், சிறுமியரிடம் காட்டிக்கொள்வர்.
சிறுவர், சிறுமியருடன் நீண்ட நேரம் பழகுவதால், அவர்களது விருப்பங்கள் என்ன, அவர்கள் எதில் பலவீனமானவர்களாக இருக்கின்றனர் என்பதை முழுமையாக தெரிந்து வைத்து கொள்கின்றனர். சிறுவர், சிறுமியரிடம் நம்பகத் தன்மையை உருவாக்கி மெல்ல மெல்ல அவர்களை ஆட்படுத்துகின்றனர்.
அவர்கள் சொல்வதை செய்யும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடுகின்றனர். அதன்பின் தான் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அத்துமீறல்களை சிறுவர், சிறுமியர் வெளியில் சொல்ல முடியாத அளவு அவர்களது மனநிலையில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குற்ற உணர்வுடன் அவர்கள் திகழ்வதால் இதனை வெளியில் சொல்வதில்லை. இதுவே குரூரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய தொழில்நுட்பமும், இவர்கள் இலக்குகளை எளிதாக அடைய வழிவகுக்கிறது.
ஏனெனில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள், குரூரர்கள். சிறுவர், சிறுமியரின் நடவடிக்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்றோர் கண்காணித்தால், இதுபோன்ற குரூரர்கள் அவர்களது வாழ்க்கையில் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.