என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 201640"

    ராமத்தில் இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளையும் தெரிவிக்கவில்லை.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில் இறைச்சிக் கடைகள் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றன. வாரம்தோறும் சேகரமாகும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர்.

    குறிப்பாக ரோட்டோரங்களிலும், மழை நீர் ஓடைகளிலும், மூட்டை, மூட்டையாக இத்தகைய கழிவுகளை கொட்டுகின்றனர். குறிப்பாக கோழிக்கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுவதால் சில நாட்களில், அப்பகுதியில் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது.

    கழிவுகள் மட்கும் முன் அதிலிருந்து நோய்க்கிருமிகளும் கால்நடைகளுக்கு பரவுகின்றன. உடுமலை நகர எல்லையிலுள்ள ராஜவாய்க்கால் பள்ளம், கணபதிபாளையம் பிரிவு, அந்தியூர், ஏரிப்பாளையம் ஓடை ஆகிய இடங்களிலும், குடிமங்கலம் பகுதியில், உப்பாறு ஓடையிலும் இறைச்சிக்கழிவுகள் தொடர்ந்து வீசப்படுகின்றன.

    திறந்த வெளியில், கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளால், ஈர்க்கப்படும் தெருநாய்கள் அப்பகுதியில் முகாமிடுகின்றன. இவ்வகை இறைச்சியால் ஈர்க்கப்படும் தெருநாய்கள், கழிவுகள் இல்லாத போது கால்நடைகளை தாக்கும் நிலைக்கு மாறி விடுகின்றன. சமீபத்தில் பல இடங்களில், கிராமப்பகுதியில் இத்தகைய பழக்கத்திற்கு ஆளான நாய்கள் பல்வேறு இடங்களில் கால்நடைகளை கடித்து குதறுவது தொடர்கதையாகியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இறைச்சிக்கழிவுகள் மற்றும் பண்ணையில் நோயினால் இறக்கும் கோழிகளை, திறந்த வெளியில் வீசுவதை தவிர்க்குமாறு பண்ணையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் கிராமத்தில் இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளையும் தெரிவிக்கவில்லை.இதனால் அனைத்து கிராமங்களிலும், நகர எல்லையிலும், இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது, அடுக்கடுக்கான பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் தெருநாய்களால்ம னிதர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இறைச்சி கழிவுகளை நாய்கள் திண்பதால் வெறிபிடித்து ஆடுகளை கடித்து கொல்கின்றன.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நந்தவனம்பாளையம் வெறுவேடம்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 5 ஆடுகளை வெறி நாய்கள் கடித்துக்கொன்றன. நேற்று பூசாரிகவுண்டர் தோட்டத்தில் 6ஆடுகளை கடித்துக்கொன்றன. அப்பகுதியில் கோழிப்பண்ணைகள் உள்ளது. அங்குள்ள இறைச்சி கழிவுகளை நாய்கள் திண்பதால் வெறி பிடித்து ஆடுகளை கடித்து கொல்கின்றன. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் நாய்கள் கடித்து 19 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நாய்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் சுற்றி திரிகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி-விஸ்வத்தம் ரோட்டில் குப்பையில் கொட்டப்பட்ட கழிவுகளை சாப்பிட வந்த நாய்களுக்குள் மோதல் ஏற்பட்டு அந்த பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் 19 பேரை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன. செவல்பட்டியை சேர்ந்த முத்துவீரன்(வயது 50) என்பவர் சிவகாசி பிச்சாண்டி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவரை நாய் கடித்துள்ளது. அதேபோல் சிவகாசி நகராட்சி துப்புரவு தொழிலாளி கணேசன்(49) என்பவரை பிச்சாண்டி தெருவில் உள்ள நாய்கள் கடித்து காயப்படுத்தி உள்ளது. திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கீதாவை பள்ளி வளாகத்தின் உள்ளே புகுந்த வெறிநாய் கடித்துள்ளது. காயம் அடைந்த மாணவி சங்கீதா சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதேபோல் முத்துமுனியப்பன்(25), சுதாகர்(47), பரமகுரு(35), பாண்டியராஜன்(31), குமார்(40), முத்துலட்சுமி(63), தங்கேஸ்வரி(18), தமிழ்செல்வி(45) உள்பட 19 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாய்களால் பொதுமக்கள் அதிக அளவில் பாதித்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை போடவும், வெறிநாய்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×