என் மலர்
நீங்கள் தேடியது "tag 210903"
திருமங்கலம் அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டியை சேர்ந்தவர் படித்துரை(44). இவருடைய மனைவி தேடா செல்வி. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
படித்துரை அனுப்பபட்டியில் டிங்கரிங் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு டிங்கரிங் பணிக்கு வந்த ஆட்டோவை எடுத்து கொண்டு செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் சென்றார்.
அனுப்பப்பட்டி அருகே வரும்போது பிரேக் பிடிக்காததால் சாலையோர புளியமரத்தில் ஆட்டோ மோதியது.
இதில் படுகாயமடைந்த படித்துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் நடந்த சண்டையை விலக்க சென்றவருக்கு காது துண்டானது. இதில் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டையைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் அசோக்( 23) லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கீதா. சம்பவதன்று அசோக் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி பிரியாவை தாக்கி தகராறு செய்தார். இதைத் பக்கத்து வீட்டை சேர்ந்த கீதா அங்கு சென்று அசோக்கை கண்டித்தார். உடனே அசோக் கீதாவை தாக்க முயன்றார்.
அங்கிருந்து வெளியே வந்த கீதா இது குறித்து தனது அண்ணன் மெக்கானிக் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த அருண்குமார் இது குறித்து அசோக்கிடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அசோக், அருண்குமாரின் காதை கடித்து துண்டாக்கி விட்டார். இதில் அலறி துடித்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து லாலாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.