என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 221298
நீங்கள் தேடியது "பொத்தனூர்"
பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் மற்றும் பூக்குண்ட திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிம்மம்,ரிஷபம், அன்னபட்சி,பூதகி, யானை மற்றும் குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
22-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 23-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வீதி வழியாக உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.
நேற்று மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கியும், பெண்கள் பூ போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று (புதன்கிழமை) காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் , அலகு குத்துதியும் ஊர்வலமாக சென்றனர்.
இன்று இரவு வாண வேடிக்கை நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும்,27-ந் தேதி மஞ்சள் நீராடலும்,28-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 29, மற்றும் 30-ந் தேதி முதற்கால மற்றும் 2-ம் கால யாக பூஜையும், அன்னபாவாடை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். எந்தவித அசம்பா விதங்களும் ஏற்படாத வகையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே மின் கம்பிகளை துண்டித்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X