என் மலர்
நீங்கள் தேடியது "கோத்தகிரி"
- சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் மாபெரும் வெற்றியை பெற்றது.
- கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் சாய் பல்லவி பங்கேற்றார்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.
படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நோய் தொற்றா? அல்லது விஷம் வைத்து கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.
- பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம்.
குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இவை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.
இவைகளில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வந்தது காட்டுப் பன்றிகள். ஏனெனில் இவைகள் விவசாய நிலங்களில் இருக்கும் பொருட்களை பெரிதும் சேதப்படுத்தி வந்தது. மேலும் காட்டு பன்றிகள் மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வந்தது. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அதிக அளவு மர்மமான முறையில் இறந்து வருகிறது. இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளிலேயே அதிக அளவு இறந்து வருவதால் அவைகளுக்கு ஏதேனும் நோய் தோற்று ஏற்பட்டு இறந்ததா? அல்லது கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. மனிதர்களுக்கும் இவைகளால் ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
- ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது.
அரவேணு,
கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி அங்குள்ள ஜுட்ஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநில அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவுத்தர் மற்றும் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில் தமிழ்நாடு, பீகார் விளையாடியது. இதில் முதல் சுற்றில் தமிழ்நாடு அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது சுற்றில் 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் ெவன்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
- பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது.
- நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி:
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள டானிங்டன் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதியாகவும், பல ஊர்களுக்கு செல்ல முக்கிய சந்திப்பாகவும் இருந்து வருகிறது.
இந்த பகுதியில் வானங்கள் அதிகமாக சென்று வருவதால் பொதுமக்கள் செல்ல சாலையின் ஓரத்தில் பல லட்ச மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை மக்களுக்கு பயன்பட்டு வருவதை விட இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகளின் உபயோகப்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்தி வைக்கவே அதிகமாக பயன்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது.
வாகனங்களை நிறுத்தி வைத்தது குறித்து அந்த பழுது பார்க்கும் கடைகளின் உரிமையாளர்களிடம் அப்பகுதியினர் போய் கேட்டால் அவர்களை கடை உரிமையாளர்கள் மிரட்டுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களின் பின்புறம் அப்பகுதியினரின் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசார் இந்த பயன்பாடற்ற வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.
- இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டியில் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது என கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஊட்டி சுற்றுலா மேக்சி கேப் ஓட்டுநர் சங்கம் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரியில் தொழிற்சாலைகளோ மற்றும் வேறு தொழில்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து சென்று வருகின்றனர். இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- அஜித் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
- மன உளைச்சல் அடைந்த அஜீத் வீட்டில் தனியாக இருந்த போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கேர்பெட்டா எஸ்டேட் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் அஜீத் (21). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 28-ந் தேதி கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாய் மற்றும் அண்ணன் அகுல், கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து உள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அஜீத்தின் தாய், அகுல் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் அஜீத் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக, அகுல் வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு அறையில் அஜீத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஜீத்தை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அகுல் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தவறான நன்னடத்தை காரணமாக கல்லூரி நிர்வாகம் ஒரு வாரம் அஜீத்தை இடைநீக்கம் செய்தது. இதனால் வீட்டில் விடுமுறை எடுத்து வந்ததாக பொய் கூறி உள்ளார். கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த அஜீத் வீட்டில் தனியாக இருந்த போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.
- கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் யாராவது தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனரா? என அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள், கோத்தகிரி நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர்.
கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் கோத்தகிரி கடைவீதி, டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை ெசய்தனர்.
இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரி களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
- போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அரவேணு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.
இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
- அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையதில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி மார்க்கமாகவே செல்கின்றனர்.
இப்படி கோத்தகிரி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில் வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.
இதனை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நெடுஞ்சா–லைத்துறை சார்பில் கோத்த–கிரியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான மலைப்பா–தையின் வளைவுகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தியும், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணியும் கடந்த 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது.
ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாலை பணி மற்றும் வேகத்தடை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்த பின்னரும் மீதமுள்ள 10 சதவிகித பணிகளை முடிக்காமலேயே உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மேல் தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணி 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமலேயே உள்ளது.
இதனால் சிறிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடுதல் வடிகால் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்.
- தரையில் அருகில் உள்ள பசுமையாக விரைவில் உதிர்கிறது.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பூத்துக் குலுங்கும் டேலியா பூக்கள். தற்போது இந்த வகை பூக்கள் அழிந்து கொண்டே வருகிறது.
இந்த டேலியா பூவானது சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ரோஸ் போன்ற பல கலர்களில் கண்ணை கவரும் வகையில் பூத்துக் குலுங்க கூடிய கோடைகால மலராகும்.
இது டேலியா இம்பீரியலிஸ், அல்லது பெல்ட்ரீ டேலியா, 8 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும். இவை ஆஸ்டெரேசி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய பூக்கும் தாவரமாகும். இந்த வகை பூக்கள் மெக்சிகோ, பெலிஸ், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார், நிக்கராகுவா, கோஸ்டாரிகா, பனாமா மற்றும் தெற்கு கொலம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது.
இது மேட்டு நிலங்களின் தாவரமாகும், இந்த பூக்கள் முக்கியமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல மலைகளின் அடிவாரத்தில் (கீழ் காடுகளின் ஈரப்பதத்திற்கு மேல்), 1,500-1,700 மீட்டர் (4,900-5,600 அடி) உயரத்தில் காணப்படுகிறது.இது லேசான காலநிலையில் குறுகியதாக இருக்கலாம். அதன் நிலத்தடி அடித்தளத்திலிருந்து, ஆலை வெற்று, கரும்பு போன்ற, 4-பக்க தண்டுகளை வீங்கிய முனைகள் மற்றும் பெரிய, முப்பரிமாண இலைகளுடன் அனுப்பத் தொடங்கும்.
தரையில் அருகில் உள்ள பசுமையாக விரைவில் உதிர்கிறது.
டேலியா மரம் பொதுவாக இலையுதிர்காலத்தில் உறைபனி அபாயத்திற்கு முன் பூக்கும்.
விதை அல்லது தண்டு வெட்டல் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 30 செமீ (12 அங்குலம்) நீளம் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு கணுக்கள், கிடைமட்டமாக மண்ணின் கீழ் இடப்பட்டது. பட்டாணி சரளை, சிதைந்த கிரானைட் அல்லது கிரிட் ஆகியவற்றைக் கொண்டு மேல்-உரவித்தல் விருப்பமானது ஆனால் ஈரப்பதம் தக்கவைத்தல், அரிப்பு கட்டுப்பாடு மற்றும் கூடுதல் வடிகால் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்.
- வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது.
- மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது.
அரவேணு,
கோத்தகிரி பழைய உழவர் சந்தை வளாகத்திற்கு அருகே தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் பின்புறம் நேற்று அதிகாலை மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறியது. அப்போது அதன் எடை தாங்கமல் தொட்டியின் மேல் மூடி உடைந்து விழுந்தது. இதில் கழிவுநீர் தொட்டிக்குள் காட்டெருமை தவறி விழுந்ததுடன், வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி தவித்த காட்டெருமையை கிரேன் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காட்டெருமை சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர் ராஜனும் வரவழைக்கப்பட்டார். ஆனால், குறுகிய தொட்டிக்குள் சிக்கி இருந்ததால், மீட்கும் முன்பே காட்டெருமை இறந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் காட்டெருமை உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 4 வயதான ஆண் காட்டெருமை என கூறினர்.
- கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது.
- அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை காணவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்த பகுதிக்கு செல்லும் பாதை மலைப்பாதையாகும். இதனால் கவனமுடன் செல்ல வனத்துறையினரும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆபத்தை உணராமல் ஆபத்தான இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் எல்லாம் அறிவிப்பு பலகை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.