என் மலர்
நீங்கள் தேடியது "மார்த்தாண்டம்"
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.
வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.
அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு கடமக்கோடு மடத்துடத்துவிளையை சேர்ந்தவர் ராஜஜெயசிங் (வயது 36).
இவருக்கு கிரிஸ்டல் பியூலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. இவர் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அருகாமையில் ஒருவருக்கு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு செம்மாங்காலை பகுதியை சேர்ந்தவர் தாசையன் (வயது 65) கூலிதொழிலாளி.
இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உண்டு அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் பக்கத்தில் உள்ள கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதை அடுத்து சுசீலா அவரது உறவுக்காரர் ஒருவரிடம் சம்பவத்தை கூறி குளத்தில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது குளத்தின் கரையில் தாசையனுடைய துணி மற்றும் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்துள்ளார். அப்போது தாசையன் குளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாசையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருமானம் இல்லாததால் மனவிரக்தி
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பம்மம் கொற்ற விளையை சேர்ந்தவர் ரெஜின் (வயது 29) திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.
அங்கு வேலை சரியாக அமையாததால் சொந்த ஊரான மார்த்தாண்டத்திற்கு வந்து வெல்டிங் தொழில் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் இல்லாததால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்தி விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.காலையில் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனையடுத்து அவரது தந்தை மாடியில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
- இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.
கன்னியாகுமரி:
குலசேகரம் - மார்த்தாண்டம் சாலை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள், அரசு நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.
புத்தன்கடை அருகே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் கடந்த சில மாதங்களில் சாலையில் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியிருந்தார்கள். இதனால் தண்ணீர் வெளியே செல்லமுடியாமல் சாலையில் தேங்கியது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டன.
மழைகாலங்களில் தண்ணீர் வெளியேறாமல் சாலையில் தேங்கியது.இதை கண்டித்து அரசியல் கட்சியினர் மீன்பிடி, வாழை நடும் போராட்டங்கள் நடத்தினர். உடனே நெடுஞ்சாலைதுறையினர் ஒருவாகனத்தில் கொஞ்சம் மண்கொட்டி தற்காலிகமாக சரிசெய்தனர்.
சாலையின் ஒரு பகுதி அருவிக்கரை ஊராட்சிக்கும், மறுபகுதி திருவட்டார் பேரூராட்சிக்கும் சொந்த மானது. உடனே அரசு அதிகா ரிகள் வந்து பார்வையிட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்களை இடித்து அகற்றினார்கள். அதன் பிறகு சாலையில் தேங்கிய தண்ணீர் வெளி யேற்றப்பட்டது.
ஆனால் மழையில் சேதமடைந்த சாலையை சரிசெய்யாமல் நெடுஞ்சா லை துறையினர் இருந்தனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் சிரமப் பட்டன. தற்போது தினமும் மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் தண்ணீர் வெளியே செல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.நேற்று மாலையில் பெய்த கனமழை யால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சாலையில் தேங்கி யது . இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அந்த பகுதி வழியாக செல்லமுடியாமல் அவதிபட்டார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுகிறது
- அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களி லிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியா ளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட மூன்று கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பண்டார விளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் ஜஸ்டின்ராஜ் துக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
- சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக் கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேலை களில் மாண வர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட ஒரு கனரக லாரியை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
- பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
நாகர்கோவில்:
கோழிப்போர் விளையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இவரை ஆட்டோ டிரைவர் சுஜின் என்பவர் அழைத்து செல்வார்.
சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்தது. இது குறித்து தாயார் சிறுமியிடம் கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் சுஜின் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரத்தை தெரிவித்தார். இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக சிறுமி கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சுஜின் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாகியுள்ள சுஜினை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 8 வயது சிறுமிக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இறந்த 80 வயது மதிக்கத்தக்கவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார் இது குறித்து சமூக சேவகர் ராஜகோபால் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடன் அவரது வாகனத்தில் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றார் ஆனால் இவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரிய வில்லை. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 2 பேர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம்
- போலீசார் தீவிர வாகன சோதனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை போலீசார் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிய போது, கார் குழித்துறை சப்பாத்து பாலம் அருகாமையில் சென்றபோது தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றது. அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் கணேஷ் தப்பி ஒடிவிட்டார்.
காரில் இருந்த டிரைவர் மற்றும் 2 பேர் சிக்கினர்.அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருளும் சிக்கியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார்.இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகில் துணிக்கடை நடத்தி வருவருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது 30) மூலம் ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என்பவர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்
மேலும் ஓட்டுனருக்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கணேசை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடநாட்டு கும்பல்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கணேஷ் கைதாகும் பட்சத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- குற்றவாளியை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது
- தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று படந்தாலு மூடு சோதனை சாவடி யில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் வேகமாக வந்தது.
அந்த காரை போலீசார் நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் போலீசார் மடக்கினர்.
காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களி டமிருந்து எம். டி .எம். ஏ. என்ற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேர்
மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது.
இவர்கள் மூலம் ராஜஸ்தா னிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளான்.
இந்தநிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.