search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சுவிரட்டு"

    • சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    • விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மாடு முட்டியதில், சேலம் வணங்கம்பாடியை சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    மாடுபிடி வீரர் கார்த்திக் உயிரிழப்பை தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

    விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தின் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    சங்கத்தின் கவுரவ தலைவர் சேவியர்தாஸ், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் ரெக்குமோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்வரன், கவுரவ ஆலோசகர் தனசேக ரன், பொருளாளர் ரஞ்சித், மாவட்ட துணை செயலா ளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு 6 மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவ தும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன், செல்வம், கவுந்தர பாண்டியன், விஜய், ஸ்ரீதர் ராஜ், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 நாட்கள் நடந்த மஞ்சுவிரட்டில் 99 காளைகள் பங்கேற்றன.
    • மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினர்.

    சிவகங்கை

    சிவகங்கை காமராஜர் காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் கே.டி.ஆர். கல்யாணி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காகவும் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இனைந்து நடத்தும் 3 நாள் தொடர் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன், மாநில கவுரவ தலைவர் கே.டி.ஆர். தங்க ராஜ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் அதிகரை வேங்கை, திருப்புவனம் தமிழ்ச் சங்க வழக்கறிஞர், துணை பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் மயில்வாகனம், மாநில கவுரவ ஆலோசகர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சிவ கங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 99 காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினார்.

    இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஆயிரக்க ணக்கான பொது மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப் புல்லாணி ஒன்றியம் உதய–நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டா–லின் நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் எஸ்.பி.ஜெயமுரு–கன் வரவேற்றார்.

    நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த் திக், உத்திரகோச–மங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன் சிலர்கள் ஆதித்தன், கார்த் திகேஸ்வரி கொத்தலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் (மேற்கு), நாகேஸ்வரன் (கிழக்கு) உட்பட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட் டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்க–ளிடம் பிடிபடாத காளை–களின் உரிமையாளர்க–ளுக் கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–களும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

    • மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை தேவஸ்தா னத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவில் விவசாய நிலத்தில் 2 சமூக மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்ற னர். இந்த ஆண்டு கோவி லுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சோளம், நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த நிலத்தில் அனுமதி பெறாமல் இளவட்ட மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்துள் ளனர். எனவே அரசு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு அரசாணை யில் இப்பகுதி இடம் பெறவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றார்.

    போலீசார் தரப்பிலும் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையடுத்து சிங்கம்பு ணரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் இள வட்ட மஞ்சுவிரட்டு நடை பெறாது என போலீசார் அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் சிங்கம்புணரி கிழவன் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இளவட்ட மஞ்சு விரட்டு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் எனவும் ேபாலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள் ளன. தற்போது அந்த பகுதியில் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    • சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை உணர்த்தும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கீழ்ச்செவல் பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×