என் மலர்
நீங்கள் தேடியது "ரிஷப்பண்ட்"
- என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.
- ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.
வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் 6-வது சதத்தை தவற விட்டார். ரிஷப்பண்ட் 6-வது முறையாக 90 ரன்னுக்கு மேல் அவுட் ஆகி உள்ளார்.
இந்த நிலையில் சதம் அடிக்க இயலாமல் போனது தனக்கு எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தனிப்பட்ட வீரராக நான் சாதனைகள் பற்றி சிந்திப்பது இல்லை. 3 இலக்கம் என்பது வெறும் நம்பர்தான். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.
சதம் அடித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்படி நடக்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அதற்காக வருத்தமும் படமாட்டேன். எனது பேட்டிங் நன்றாக அமைந்தது.
ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
- ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.
- ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.
இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.
சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.
விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
ரூர்க்கி அருகே முகமது பூர் ஜாட் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது. கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. விபத்து தொடர்பாக ரிஷப்பண்ட் போலீசாரிடம் கூறும்போது, 'தான் சிறிது தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்து ரிஷப்பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர போட்டி தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பிப்ரவரியில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரிஷப்பண்ட் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரிஷப்பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
- காயம் அடைந்த தசைதார்கள் இயற்கையாக குணமாகுகிறாதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
- அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ரிஷப்பண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
காயம் அடைந்த தசைதார்கள் இயற்கையாக குணமாகுகிறாதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். மேலும் அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
- நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.
பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-
என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
- இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
- உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். அந்த சமயத்தில் அவர் தேவையற்ற ஷாட் அடித்து அவுட் ஆனதாக விமர்சனம் எழுந்துள்ளது.
போலண்ட் வீசிய 56வது ஓவரில் 3-வது பந்தை ரிஷப் பண்ட் லாப் ஷாட் அடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த பந்திலும் அவர் அதே போலத் தான் ஆடுவார் என போலண்ட் பந்து வீசினார். அது போலவே ரிஷப் பண்ட் கீழே குனிந்து ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பேட்டில் டாப் எட்ஜ் ஆன பந்து தேர்டு மேன் திசையில் நின்று இருந்த நாதன் லயனிடம் கேட்ச் ஆனது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பிட்ட 2 பீல்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த இடத்தில் ரிஷப் பண்ட் பந்தை அடித்தார். இது முட்டாள்தனமானது. அந்த சமயத்தில் இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தபோது நிலைமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும்.
இது உங்கள் இயல்பான விளையாட்டு அல்ல. அது ஒரு முட்டாள் ஷாட். இது உங்கள் அணியை மோசமாக வீழ்த்துகிறது என்றார்.
- பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
- இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
விசாகப்பட்டினம்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-
திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.
நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.
பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.
நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.
5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.