என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"

    • பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே நிதிஷ்குமார் இருப்பார்.
    • பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன். கட்சி முடிவு செய்தால், நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன்.

    தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன்.

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருக்கிறார்.

    பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ்குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. எனவே அவர் பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே இருப்பார் என தெரிவித்தார்.

    • வக்பு மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தன.
    • பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், "வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்" என்று கூறியுள்ளார்.

    இது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன.
    • நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்.

    பாட்னா :

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ரூ.15 ஆயிரத்து 871 கோடி மதிப்பிலான மின்துறை திட்டங்களை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    நாட்டில் ஒருசில மாநிலங்கள், மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் ெசய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி வருகிறது.

    அந்த மின்சாரத்தை பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 2018-ம் ஆண்டு, பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்தது.

    2005-ம் ஆண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மின்சார பயன்பாடு வெறும் 700 மெகாவாட்டாக இருந்தது. தற்போது, 6 ஆயிரத்து 738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உருவாக்க விரைவில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப் போகிறோம்.

    எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன. பிறகு ஏன் சில மாநிலங்கள் மட்டும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்க வேண்டும்?

    நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும். அதற்கு 'ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்' கொள்கையை ஏற்க வேண்டும் என்று முன்பே பல தடவை சொல்லி இருக்கிறேன்.

    நாங்கள் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி, மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம். இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. சதி செய்தது.
    • மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் முதல் மந்திரியும், அக்கட்சி தலைவருமான நிதிஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பீகாரில் கடந்த 2005, 2010-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் எங்கள் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) குறைவான இடங்களைப் பெற்றதில்லை என்பதை அவர்கள் (பா.ஜ.க.) நினைவில் கொள்ள வேண்டும்.

    2020-ல் நடந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்ய அவர்கள் (பா.ஜ.க.) முயற்சி செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

    பீகார் அவர்களிடம் (மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து) எதுவும் பெறவில்லை. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

    அவர் (பிரதமர் மோடி) பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்து வளமாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைகளை முன்னேற்றாமல் நாடு முன்னேற முடியாது. அவர்களை (பா.ஜ.க.) எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும். ஆனால் ஒருங்கிணைவது அனைத்துக் கட்சிகளின் கையில் உள்ளது. அதை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன் என தெரிவித்தார்

    • கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    பாட்னா:

    இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது பாதயாத்திரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது நிதிஷ் குமார் பேசுகையில், அவர்கள் (மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு) கொரோனாவில் முதலில் ஏன் பின்வாங்கினார்கள்? இப்போது காங்கிரசார் பாதயாத்திரை போகிறபோது இப்போது எதனால் திடீரென விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தாக வேண்டும். யாத்திரைக்கு ஏன் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மட்டும் ஊர்வலங்கள் எல்லாம் நடத்துகிறார்களே? என கேள்வி எழுப்பினார்.

    • பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என விளக்கம்.
    • எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உறுதியுடன் இருப்பதாக தகவல்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சியான காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால், தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதிய இந்தியாவின் தேச தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், புதிய இந்தியாவின் புதிய தந்தை, தேசத்திற்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். சுதந்திர போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • நிதிஷ்குமார் ‘சமாதான யாத்திரை’ என்ற யாத்திரையை தொடங்கினார்.
    • இந்த யாத்திரை, பிப்ரவரி மாதம்வரை நடக்கும்.

    பாட்னா :

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் அதில் இருந்து விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார்.

    பின்னர், செப்டம்பர் மாதம் டெல்லி சென்று, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து கூறினார். காங்கிரசின் பாதயாத்திரை முடிந்த பிறகு அதுபற்றி முடிவு செய்வதாக சோனியாகாந்தி உறுதி அளித்தார்.

    இந்தநிலையில், நிதிஷ்குமார் 'சமாதான யாத்திரை' என்ற யாத்திரையை நேற்று தொடங்கினார். அப்போது அவரிடம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-

    எனது அரசு தொடங்கிய வளர்ச்சி திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்வதில்தான் இப்போது மிகவும் அக்கறையாக இருக்கிறேன். மாநிலம் முழுவதும் பயணம் செய்யப்போகிறேன்.

    வளர்ச்சி திட்டங்கள் முடிவடைந்து இருந்தால், மகிழ்ச்சி அடைவேன். முடிவடையாவிட்டால், அவற்றை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன்.

    இந்த யாத்திரை, பிப்ரவரி மாதம்வரை நடக்கும். அதன்பிறகு பீகார் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். மார்ச் மாத இறுதிவரை கூட்டத்தொடர் நடக்கும்.

    அதைத்தொடர்ந்து, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான வாய்ப்புகளை கவனிப்பேன். அந்த பணியை புதிதாக மேற்கொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்தார்.

    பின்னர், 2017-ம் ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். கடந்த ஆண்டு பா.ஜனதா கூட்டணியை விட்டு விலகி, ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார். இந்தநிலையில், ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    அதனால், அவர் மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-

    பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட நான் உயிரை மாய்த்துக்கொள்வேன். கடந்த 2017-ம் ஆண்டு, லாலுபிரசாத் யாதவ், அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நான் பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது மிகவும் தவறு.

    அந்த கூட்டணியில் இருந்தபோது, எனது ஆதரவாளர்கள் அனைவரது ஓட்டுகளையும் பா.ஜனதா பெற்று வந்தது. பா.ஜனதாவின் இந்துத்துவா கொள்கையால் அதிருப்தியில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளும் அதில் அடங்கும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளை கைப்பற்றப்போவதாக பா.ஜனதா கூறுவது கேலிக்கூத்தானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.
    • பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

    பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

    மத்திய மந்திரிகளாக இருந்த நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் பீகாருக்கு செய்தது என்ன?

    காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த முதல் மந்திரி நிதிஷ்குமார், பிரதமர் பதவி மீது கொண்ட பேராசை காரணமாக சோனியாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, லாலுவின் ஜாதி வெறி மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக போராட வேண்டிய நிதிஷ்குமார் பிரதமர் பதவி மோகத்தில் லாலுவின் மடியில் அமர்ந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நிதிஷ் குமார் இன்று சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் உடனிருந்தனர். இச்சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக நிதிஷ் குமார் கூறுகையில், மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நாங்கள் ஒன்றாக இந்த விஷயத்தில் முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

    • பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று சந்தித்தார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார். அவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.

    • பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவை சந்தித்தார்.
    • தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

    பாட்னா:

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என அவர் கூறியிருந்தார்.

    இதற்கிடையே, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை நிதிஷ்குமார் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

    இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் கொல்கத்தா செல்கிறார். அங்கு அவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மதியம் 2 மணியளவில் சந்திக்க உள்ளார். பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×