என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்பவானி"

    • பெருந்துறை வாய்க்கால் மேட்டில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது
    • 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    பெருந்துறை,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 1.3 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த வாய்க்கால் இருகரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் கரைகள் பழமை காரணமாக ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் கான்கிரீட் கரைகளாக அமைக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

    இந்நிலையில் பெருந்துறை வாய்க்கால் மேட்டில் நேற்று முன்தினம் மாலையில் கீழ்பவானி வாய்க்காலின் வலது கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கசிவுநீர் பெருக்கெடுத்தது.

    இந்த தண்ணீர் வாய்க்காலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கசிவு நீர் ஓடை வழியாக இடது புறக்கரைக்கு சென்றதால் அங்கும் உடைப்பு ஏற்பட்டது.

    வாய்க்காலில் 1300 கன அடி நீர் சென்று கொண்டிருந்ததால் உடைந்த இரு கரைகளில் இருந்தும் வெளியேறிய தண்ணீர் வெள்ளத்தைப் போல விளை நிலங்கள் வழியாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பாலப் பாளையம், சின்னியம் பாளையம், கூர பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், வாழை, கரும்பு , தென்னை உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் இந்த ஊர்களில் செல்லும் தார் சாலைகள் மண்ணரிப்பு ஏற்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் விலை நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் புகுந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் வடிய தொடங்கி உள்ளது. நேற்று கரை உடைப்பு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி இன்னும் 10 நாட்களுக்குள் வாய்க்கால் கரை உடைப்பு சீரமைக்கப்படும் என்றார்.

    இந்நிலையில் இன்று முதல் வாய்க்கால் கரைகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக பொதுப்பணி துறையினர் அங்கு முகாமிட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    இதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் நேற்று இரவுவே வரவழைக்கப்பட்டு உள்ளன.  

    • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.71 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 791 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது.
    • கீழ்பாவனி வாய்க்காலுக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 578 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து நேற்று மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5-ம் சுற்று தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    நேற்று 500 கன அடி திறந்து விட்ட பட்ட நிலையில், இன்று கீழ்பாவனி வாய்க்கா லுக்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காளிங்கராயன் பாச னத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்று க்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகி றது.

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    திருப்பூர்:

    கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் கடைமடை பகுதியான மங்கலப்பட்டிக்கும்மங்களப்பட்டியை அடுத்துள்ள மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்களுக்கு முற்றாக வராமல் நின்றுபோனது.மங்களப்பட்டி பகுதிக்கு மிகமிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்துவயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    நெல் நாற்றங்கால் தயாரிக்கநாற்றங்கால்களுக்கு தண்ணீர் விட முடியாமலும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கீழ் பவானிக் கால்வாயில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதிய தண்ணீரைப் பெற்று கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    ×