என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்"
- ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
- ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54 வது சரக்கு மற்றும் சேவை வரி [ஜிஎஸ்டி] கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனிகளுக்காக ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து நவம்பர் மாதம் நடக்க உள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க அரசு பரிசீலித்து வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறியதால் இந்த முடிவை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
- 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது.
- தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதில் இணைய வழியாக பங்கேற்றார்.
சென்னை:
இணைய வழி விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார்.
இணையவழி விளையாட்டுக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தங்கம் தென்னரசு வலிமையான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இணையவழி சூதாட்டம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்தார்.
மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டியில் பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஐந்து வரி அடுக்குகள் உள்ளன.
- இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்ரீநகரில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள், கேளிக்கை விடுதிகள் (கேசினோக்கள்), குதிரை பந்தயம் (ரேஸ் கோர்ஸ்கள்), ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்