என் மலர்
நீங்கள் தேடியது "குமரி மாவட்டம்"
- தமிழகத்துடன் இணைந்த தினம்
- கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற 12-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
தமிழகத்துடன் குமரி இணைந்த தினத்துக்கு உள்ளூர் விடுமுறை செலாவணிமுறி சட்டத்தின்படி அறிவிக்கப்பட வில்லை என்பதால் 1-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி நடக்கிறது
- அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நாகர்கோவில்:
உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சி களிலும் 1-ந் தேதி பகல் 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து ரைக்கப்பட உள்ளது.அரசால் பல்வேறு துறை களின் மூலமாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்ட ங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்து ரைக்கவும், பொது மக்க ளுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்அரவிந்த் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம்
- 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கை, வரவு, செலவு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட இந்து நாடார் சங்கத்தின் 2022-ம் ஆண்டிற் கான பொதுக் குழு கூட்டம் நாகர் கோவில் சான்றோர் நகர் ஜெக நாதன் தெருவில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் சுபாஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான நிர்வாக ஆண்டறிக்கையை சங்கத் தின் பொதுச் செயலா ளர் பாரத் சிங் அவர்க ளால் வாசித்து அங்கீகரிக்கப் பட்டது. 2021-2022 நிதி ஆண்டிற்கான வரவு, செல வினை சங்கப் பொருளாளர் ராஜதுரை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுக் குழுவில் அங்கீகரிக்கப் பட்டது. கூட்ட தீர்மானத் தில் காலஞ்சென்ற சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்து நாடார் வரலாறு, சமுதாய மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், தொழில் துறை மற்றும் விளையாட்டு துறைகளில் முன்னேற்றம் பெற்றிடவும், இந்து நாடார் மாநாடு நடத்திடவும் ஆவண செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் ஜெயபிரம்ஆனந்த், இனச்செயலாளர் தர்மலிங் கம் என்ற உடையார், செயற் குழு உறுப்பினர்கள் ரெத்தி னாகரன், பூபதி, கனகநா தன், தமிழ்செல்வன், சுரேந்திரகுமார், முத்தரசு, சிவகுரு குற்றாலம், சுயம்பு, தங்கமுருகேசன், பாபுராஜேந்திர பிரசாத், செல்வமணி என்ற மணி, செல்வன், டாக்டர். ஹரிஹர சுதன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் சங்க துணைத் தலைவர் பொறியாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை
- குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, திருட்டு மது விற்பனை செய்பவரர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று முன் தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள பலராமபுரம் சாமவிளை புத்தன்வீட்டை சேர்ந்தஅல் அமீன் (வயது 31) என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதே போல் நாகர்கோவில் வெட்டூணிமடத்தை சேர்ந்தவர் செல்வன் (23). சமீபத்தில் இவரை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் வடசேரி போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே இரணியல்போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதே போல் வாத்தியார்விளை சேர்ந்தவர் அஜித் என்ற அஜித்குமார். இவரையும் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வடசேரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இவர் மீதும், இரணியல் போலீஸ் நியைத்தில் வழக்குகள் உள்ளன.
இவர்கள் இவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயில் அடைக்க உத்தரவிடுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலகல் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் செல்வன், அஜித் ஆகிய இருவரையும் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை. ஜெயிலில் அடைத்தனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
- நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கென ரூ.165 கோடியும், பழுதடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைப்பதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில்களை சீரமைப்பதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், செயலாளர் கார்த்திகேயன் முதல் மனுவை கொடுத்தனர். மனுவில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.
- பாளை. ஜெயிலில் அடைப்பு
- இதுவரை 70 பேர் மீது பாய்ந்தது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இது வரை கஞ்சா மற்றும் குட்கா வழக்கில் கைது செய் யப்பட்டவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகளில் உள்ள வர்களையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை 70 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தர விட்டார்.இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் செல்வராைஜ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
- குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-202-ம் கல்வியாண்டில் முதலா மாண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட். மேலும் இதுபோன்ற படிப்புகள் பயிலும் படை அலுவலர் தகுதிக்குகீழ் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப் பங்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித்தொகை பெற குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற தகுதி உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் முதற்கட்டமாக இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கல்வி சலுகை பெற இணையதளத்தில் பி.எம்.எஸ்.எஸ். என்ற தலைப்பின் கீழ் சான்றுகளுக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையம், வங்கி மற்றும் இவ்வலுவ லகத்திலிருந்து உரிய சான்று பெற்று தேவையான ஆவ ணங்களுடன் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் அதன் அசல் களை உடனடியாக (மூன்று நாட்களுக்குள்) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப் பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் பெண் குழந்தை களுக்கு ஆண்டொன் றுக்கு ரூ.36 ஆயிரம், ஆண் குழந்தை களுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி இறுதி ஆண்டுவரை தொடர்ச்சியாக வழங்கப் படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட முன் னாள் படைவீரர் நல அலுவலகத்தை (தொலை பேசி எண்.04652-243515) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது விவசாயி களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாத்தி டவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ங்களை கடைபிடிப்பதையும் ஊக்குவிக்கிறது.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியி டப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய ப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமா கவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமா கவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயி ருக்கு ஏக்கருக்கு ரூ.515 மட்டும் காப்பீட்டு கட்டண மாக செலுத்தினால் போது மானது.
விவசாயிகள் இத்திட்ட த்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
கும்பப்பூ நெற்பயி ருக்கான இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34 ஆயிரத்து 351 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவிக்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இய லாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தியது தி.மு.க.வின் ஆட்சியில் தான்
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் இரவி புதூர் ஊராட்சி பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் தி.மு.க.வில் இணை யும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் மதியழகன் ஏற்பாட்டில், மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் முன்னிலையில் அரிகரன், பாரத், ஆறுமுகம் உள்ளிட்ட 50 இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட துணை செய லாளர் சோமு, பொதுக் குழு உறுப்பினர் ஜீவா னந்தம், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க. இளைஞர்களுக்கு மேயர் மகேஷ் சால்வை அணிவித்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் தான் கோவில்கள் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 450 ஆண்டுகளாக கும்பாபி சேகம் நடைபெறாமல் இருந்த திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவி லுக்கு கும்பாபிசேகம் நடத்தியது தி.மு.க.வின் ஆட்சியில் தான் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பில்லாத 100 கோவில்களை புனரமைக்க ரூ.48 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்படும்.
பின்னர் மாலை நேரங் களில் வனத்தில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் பிரதான அணையான பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான ரப்பர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்ப டுகிறார்கள். ரப்பர் உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளன. இந்த தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசிய தாவது:-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றலாத்தலங்களை மேம்படுத்துவது, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில் களையும் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை தமிழக அரசு சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள், அருவிகள், மற்றும் பூங்காக்கள்,இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள், அரிய வகை மூலிகைகள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்ட த்திற்குட்பட்ட சுற்றுலா தலங்கள் , கோவில்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் , பத்மநாப புரம் உதவி கலெக்டர் கவுசிக், பயிற்சி உதவி கலெக்டர் குணால் யாதவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் பாண்டியராஜன், இணைய தளத்தினை உரு வாக்கிய கேப்காம் சொலியூ சன்ஸ் நிறுவனர்அன்பு ராஜா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
- 1.1.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது
- 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுத லின்படி 1.1.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
எனவே சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி- முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக 8-12-2022 வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.
மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாமை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.