என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு"

    • கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

    வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

    வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

    1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

    2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

    3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

    4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

    5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.

    7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

    8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

    • தற்போது பல்வேறு காரணங்களால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது.
    • நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர்.

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் என்பது நோயற்ற உடலையே குறிக்கிறது.

    பல்வேறு விதமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இவ்வுலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது மாறி வரும் உணவுப்பழக்கம் வெவ்வேறு வகைகான நோய் காரணிகளை உருவாக்கி விடுகின்றன. இவ்வாறு உருவாகும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

    நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) எரிக்கப்பட்டு உடலுக்கு சக்தியாக மாற்றப்படுகிறது. இதற்கு உடலில் உள்ள கணையம் என்கிற சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் முக்கியமானது. இது சுரக்காமல் இருந்தாலோ, போதுமான அளவில் சுரக்காமல் போனாலோ அல்லது சுரந்தும் எதிர்ப்பு தன்மை காரணமாக பயன்படாமல் போனாலோ நீரிழிவு நோய் வந்து விடுகிறது. ஆகவே தற்போது பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா தற்போது 2-வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து 1991-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக அறிமுகப்படுத்தின. இதையடுத்து 2006 ஆம் ஆண்டு இந்நாளை ஐ.நா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    நீரிழிவு நோயானது முதல்வகை, 2-வது வகை, 3-வது வகை என பிரிக்கப்படுகிறது. இதில் முதல் வகை நோயான நீரிழிவானது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கே அதிகம் ஏற்படுகின்றது. இரண்டாவது வகையில், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகிறது.

    மேலும் இந்த வகை நீரிழிவு நோயே 90 சதவீதம் மக்களுக்கு உண்டாவதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றாவது வகை என்பது பெண்களின் கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாகும். இந்த வகை நீரிழிவானது 2 முதல் 4 சதவீத பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது உருவாகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்தாலும், சிறிது காலத்திற்குபின் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உருவாகும் நீரிழிவு நோயின் தாக்கம் உள்ள போது உடலில் ஏற்படும் சிறு,சிறு நோய்கள்கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

    2014-ம் ஆண்டு உலக அளவில் 422 மில்லியன் மக்களுக்கும், 2015-ம் ஆண்டு இந்தியாவில் 69.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் முதியவர்கள் மத்தியில் 70 சதவீத இறப்பை நிகழ்த்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது 199 மில்லியன் பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயினால் ஆண்டுக்கு 2.1 மில்லியன் பேர் இறப்பை சந்திக்கின்றனர். இத்தகு அபாயகரமான பாதிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கும் நீரிழிவு நோயை பற்றி இந்நாளில் நாம் அறிந்து கொள்வதோடு, அது பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்திட உறுதியோடு செயல்படுவோம்.

    • நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.
    • தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது.

    நாம் உண்ணுகின்ற உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ணாலே நம் உடல் ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர்.

    இதில் மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவு நாம் ரசித்து உண்ண வேண்டும் என்றால் நமக்கு அது பிடித்த உணவாக இருக்க வேண்டும். பிடித்த உணவாக இருக்கும்போது நம் வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்கும் மேலும் நாம் நமக்கு பிடித்த உணவை சுவைத்து உண்ணும் போது போதுமான அளவுக்கு நன்கு உணவை வாயில் அரைத்து உண்போம்.

    இவ்வாறு உண்ணும் போது கிட்டத்தட்ட உணவு வாயிலேயே பாதி அளவுக்கு ஜீரணமாக கூடிய நிலையில் இருக்கும். மேலும் ஏனோ தானோ என்று உணவை மென்று முழங்குவதை விட ரசித்து ருசித்து உண்ணும் போதும் நம் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் உடலுக்கு போதுமான தெம்பை மனம் அளிக்கும். நம்முடைய தினப்படி செயல்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் போதுமான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களும் சுரக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மனம் உடலோடு நேரடியாக தொடர்புடையது. உள்ளத்தின் ஆரோக்கியம் உடலின் பூரண ஆரோக்கியத்தை அழைத்து வரும் என்றால் மிகை இல்லை. ஒருவர் என்ன மாதிரியான உணவுகள் தன் உடலுக்கு ஒத்துப் போகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கால நேரத்துடன் அளவான பிடித்த உணவை சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் எனலாம். நம் தினப்படி வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தற்போது நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவிற்கு உள்ளது. நாம் நிறைய வாட்ஸப் காணொளிகள் மற்றும் பதிவுகளில் பார்க்கின்றோம். இவைகளில் வரக்கூடிய தகவல்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் கூட அரைகுறையாக ஏதேனும் பதிவுகளை வெளியிட்டு இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவர்கள் ஆலோசனை அவசியம்.

    • சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும்.
    • பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    சர்க்கரை நோய் துறை தலைவர் சுப்பையா ஏகப்பன் பேசியதாவது:-

    சர்க்கரை நோயானது வாழ்நாள் நோயாகும். உணவு, உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் தியானம் போன்ற வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வாரத்தில் 4 தினங்கள் காலை உணவில் சிறு தானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும். அதுபோல் தட்டைப் பயறு, பாசிப்பயறு, மொச்சை பயறு, பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது தவிர மாவுசத்து, குறைந்த மாவு சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எதிரானது அல்ல.

    குறிப்பாக இனிப்புடன் புளிப்பு, துவர்ப்பு சுவையுடைய பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிக இனிப்புடைய பழங்களை தவிர்க்கலாம். அது மட்டும் இன்றி நொறுக்கு தீனி சாப்பிடும் வேளையில் பழங்களை நன்கு கடித்து சாப்பிட வேண்டும். ஜூஸ் போட்டு சாப்பிடக்கூடாது.

    துவர்ப்பு, கசப்பு சுவையுடைய உணவுகளை உட்கொள்ளும் போது அது சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், பிஞ்சு மாங்காய், நாவல் பழம், பலாக்காய், வாழைப்பூ உள்ளிட்ட உணவுகளில் துவர்ப்பு சுவை அதிகம் உள்ளது. பாகற்காய், வெந்தயம் போன்றவற்றில் கசப்பு சுவை உள்ளது இவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சாப்பிடும் உணவில் காய்கறி 50 சதவீதமும், சிறு தானியம் 30 சதவீதமும், புரதம் -கொழுப்பு 20 சதவீதமும் இருந்தால் சர்கரை நோயை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.
    • நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்வதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது. அவற்றுள் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முக்கியமாக பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும். அதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது.

    அதே வேளையில் அதனை சரியான அளவில் உட்கொண்டால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதன் கிளை செமிக் குறியீடு 15-க்குள் இருக்க வேண்டும். 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் பிஸ்தா சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

    • நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
    • இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.

    நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.

    குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.

    இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.

    • சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை.
    • மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை.

    கோவை புதுசித்தாப்புதூரில் ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டரின் டாக்டர்.S.கோகுலரமணன் கூறியதாவது:-

    கோவை ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் இன்று வலைத்தளங்களில் (online) மிகவும் அதிகமாக காணப்படும் விளம்பரம். Diabetic is reversible? சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் இல்லாதவர்களாக மாற முடியுமா? இது சாத்தியமா?

    அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இது சாத்தியம் அல்ல. 5 முதல் 10 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் 10 சதவீதம் நோயின் தன்மையை குறைக்க முடியும். மருந்துகளுக்கான தேவையை குறைக்க முடியும்.

    சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை. மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை. இதில் 2-வது இன்சுலின் செயல்படாத தன்மை இருப்பவர்களுக்கு உடல்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நேரம் தவறாமை உணவு உட்கொள்ளுதல் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பை மிகவும் குறைக்க முடியும். கண்மூடித்தனமாக தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, இன்சுலினை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது.

    அன்மைக்காலத்தில் நிறைய சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட்டு, பிற மருத்துவமுறைகளை செய்து சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சேர்க்க வேண்டிய கட்டாயமாகிறது. சர்க்கரை மருந்து, மாத்திரைகளை வேற எந்த மருந்துகளுடனும் எடுத்து கொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 90876 44003, 0422-2522138 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் டாக்டர் S.கோகுலரமணன் பேட்டி

    • மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது
    • குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும்.

    'அதலைக்காய்' என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.

    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

    மஞ்சள்காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

    இந்த காயை வாங்கிச் சென்று சமைக்க ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைப்போல இதை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது. நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால் காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும். காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானது. அதலைக்காய் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவை இருக்கும். 

    கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.

    பாகற்காயைப் எப்படி பொரியல் மற்றும் குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிட வேண்டும்.

    • நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் உணவுமுறை உள்ளது.
    • நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் உடலை உருக்கி விடும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதை குணப்படுத்தவும் உதவும் உணவு வகைள் பற்றி காண்போம்:

    1) நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ், நூல்கோல், நெல்லிக்காய், வெந்தயம், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், கீரைகளை சேர்க்க வேண்டும். மாவுச்சத்து, இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    2) நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து அதன் சாறு 30 மிலி வீதம் தினமும் குடிக்கலாம். இது உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.

    3) வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் இரவு 1 டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும், ரத்த சர்க்கரையின் அளவு, தேவையில்லாத கொழுப்பைக்குறைக்கும்.

    இதுதவிர தினமும் சைக்கிள், நடைப்பயிற்சி, நீச்சல், இறகுப்பந்து என ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம், மனக்கவலை இல்லாமல் வாழப்பழக வேண்டும்.

    • நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும்.
    • வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) மதுமேக சூரணம் 1 முதல் 2 கிராம் அல்லது மதுமேக மாத்திரை 1 முதல் 2 மாத்திரை வீதம், காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    2) திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திரை காலை, இரவு எடுக்கலாம்.

    3) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. காலை, இரவு எடுக்க வேண்டும்.

    4) ஆவாரை குடிநீர் பொடி 1 முதல் 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும்.

    5) சர்க்கரைக் கொல்லி பொடி காலை, இரவு 500 மி.கி. முதல் ஒரு கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.

    சிலர் தேன் காய் அல்லது மகாகனி என்றழைக்கப்படுகிற ஸ்வெட்டீனியா தாவரத்தின் விதையை பொடித்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள், ரத்த சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். சித்தமருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை சாப்பிடலாம். ஆனால் கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    கால் எரிச்சல் நீங்க

    நீரிழிவு நோயில் வருகிற கால் மத மதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் இவைகளுக்கு காரணம் கால், மற்றும் பாதங்களில் மேலோட்டமாக உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சி ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில்,

    1) திரிபலா சூரணம் பொடி 1 கிராம் எடுத்து அதனுடன் முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் அல்லது அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. சேர்த்து காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    கால்கள், பாதங்களில் வாத கேசரி தைலம் அல்லது சிவப்பு குக்கில் தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை தேய்த்து வரவேண்டும். உள்ளங்கால், கால் தசைகளை நன்றாக பிடித்து விடவேண்டும். நீரிழிவு நோயாளிகள் கால் மற்றும் பாதங்கள், விரல்களின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும். வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • குழப்பமான மனநிலையில் இருக்கும்.
    • குழந்தையின் பேச்சு குழறும்.

    நீரிழிவு நோய் உள்ள குழந்தைக்கு ரத்தச்சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும்..

    குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும். குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும். மயக்கம் வரும். சில வேளைகளில் வலிப்பும் வரலாம்.

    பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும், என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையை தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லி வைப்பது நல்லது, எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்.
    • காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும்.

    நீண்டகால நீரிழிவு நோயினால் கால்களிலும், பாதங்களிலும் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும், கால் தசைகள் வலியாகவும், சோர்வாகவும் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) ஆவாரைப் பூ குடிநீர் பொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    2) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. அளவு காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) மதுமேக சூரணம் 1 கிராம் அல்லது மதுமேக சூரண மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும்.

    4) கால் மதமதப்பு, தசை வலி நீங்க: அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை காலை, மதியம், இரவு மூன்று வேளை வெந்நீரில் எடுக்க வேண்டும். வாத கேசரி தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை கால்களிலும் பாதங்களிலும் நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகச் சிறந்தது.

    5) ரத்த அழுத்தம் குறைய உணவில் உப்பு, ஊறுகாய் இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். வெண்தாமரை இதழ் சூரணம், அல்லது அசைச் சூரணம் 1 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை வெந்நீரில் சாப்பிட ரத்த அழுத்தம் குறையும்.

    ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும். காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, காலையில் கண் விழிக்கும்போது பாதங்களில் வலியை உணர்பவர்கள் வீட்டுக்குள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பதே பாதுகாப்பானது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    ×