என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டெருமைகளால் பீதி"

    • திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது.
    • காட்டெருமைகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அழகர் மலை, கரந்த மலை, சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது.

    இந்த மலைகளை சுற்றி மூங்கில்பட்டி, பட்டணம் பட்டி, காசம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, வேம்பரளி, மலையூர், முளையூர், உலுப்பகுடி, குட்டுப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மாமரங்கள், சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மலைகளில் இருந்து ஆங்காங்கே காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலை இறங்கி வருகிறது.

    குட்டுப்பட்டி பகுதியில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகளையும், மர வகைகளை ஒடித்து சேதப்படுத்தியது. கூட்டம் கூட்டமாக வரும் காட்டெருமைகளை விவசாயிகள் விரட்ட முடியாமல் பரிதவிக்கின்றனர். இது குறித்து குட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன் (45) தெரிவிக்கையில், வருடந்தோறும் காட்டெருமைகள் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது.இதற்கு வனத்துறை நிர்வாகம் தான் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தடுப்பு வேலிகளும் அமைக்க வேண்டும்.இது தவிர காட்டெருமைகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இரவு நேரத்தில் விவசாயிகள் காவலுக்கு கூட போக முடியவில்லை. அச்சத்துடன் இருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார்.

    • கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், நகர்பகுதிக்குள் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
    • சாலையில் காட்டெருமை உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், நகர்பகுதிக்குள் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் முக்கிய நகர்ப்பகுதிகளில் ஒன்றான ஏரிச்சாலை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிறைந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் ப‌குதியாகும்.

    இந்நிலையில் ஏரிச்சாலையில் ஒற்றைக்காட்டெருமை திடீரென உலா வந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    இதனை வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் நகர்ப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடிக்க‌டி உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×