search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை கைதி"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.

    இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×