என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டகம்"

    • தொண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர்.
    • இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிப்பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தொண்டி அருகே நம்புதாளையில் கந்தூரி விழா நடந்தது. அதில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வருவதை எதிர்பார்த்து ஒட்டகத்தை காண்பித்து வசூல் செய்தனர். சிலர் ஒட்டகத்தை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர்களை ஒட்டகத்தின் மேல் ஏற்றி சிறிது தூரம் சவாரி செய்ததற்கு தனியாக கட்டணம் வசூலித்தனர். கந்தூரி விழா முடிந்தும் தொடர்ந்து முகாமிட்டு கடைகளில் வசூல் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.
    • இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.

    விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் ராஜஸ்தானில் காரின் விண்ட்ஸகிரீனில் ஒட்டகம் ஒன்று மாட்டிக்கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நடந்த இந்த சமபவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒட்டகம் காரின் முன்புற கண்ணாடியான விண்ட்ஸகிரீனில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் வலியில் துடிப்பது பதிவாகியுள்ளது. நொஹார் நோக்கி இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த நபர் ஒட்டகம் வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்.

    இதனால் காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். வெகு நேரமாக வலியில் துடித்த ஒட்டகம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட அளவு பொருட்கள் ஏற்றி செல்வதற்கே சிலர் படாதபாடுபடுவார்கள்.
    • சில வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிளில் 4, 5 பேர் வரை ஏற்றி செல்வது போன்று காட்சிகளும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை வியக்க வைக்கும். அது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். அவரது பின்னால் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்களுக்கிடையே ஒரு பெரிய ஒட்டகத்தை வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளது.

    வழக்கமாக மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட அளவு பொருட்கள் ஏற்றி செல்வதற்கே சிலர் படாதபாடுபடுவார்கள். அதே நேரம் சில வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிளில் 4, 5 பேர் வரை ஏற்றி செல்வது போன்று காட்சிகளும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.

    இந்நிலையில் பைக்கில் கொண்டு செல்ல முடியாத அளவுள்ள பெரிய ஒட்டகத்தை வாலிபர்கள் ஏற்றி சென்ற இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 



    ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை

    லாரி, டிப்பர், டிராக்டர் மூலம்  மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியா சமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர். 

    மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். 

    நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவ மங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி யில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர். 

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
    ×