என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைகேட்பு முகாம்"

    • மேற்பாா்வை பொறியாளா் ஜவகா் தலைமை வகித்து மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.
    • மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்

    பல்லடம் :

    பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின்சார வாரிய அலுவலத்தில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு மேற்பாா்வை பொறியாளா் ஜவகா் தலைமை வகித்து மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

    எனவே, பல்லடம் பகுதி மின் நுகா்வோா் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா் 

    • கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.
    • 25 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் பகுதியில் உள்ள இதய நகரில் 32 நரிக்குறவர் குடும்பங்களுக்கான சிறப்பு குறை கேட்பு மற்றும் மருத்துவ முகாமை நேற்று காலை திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஸ்வாஹா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நரிக்குறவர் இன மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார் பின்னர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு மருத்துவப் பெட்டகங்களையும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் கூறியதாவது

    முதல் அமைச்சர் நரிக்குறவர் மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் பகுதியில் உள்ள இதய நகரில் 37 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 4ஆம் தேதி அன்று பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    அதனடிப்படையில் 37 நரிக்குறவர் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள், தகுதியுள்ள நபர்களுக்கு முதியோர் ஓய்வு ஆணைகள்,15 நபர்களுக்கு ஆதார் அட்டைகள். வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் 30 நபர்களுக்கு இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் தற்போது நடைபெற்ற மருத்துவ முகாமில் 240 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் 25 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மேலும் இம்முகாமில் டெங்கு தொடர்பாகவும் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து இப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது முதல்வர் வருகையின் போது பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது எனஇவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செந்தில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வட்டார மருத்துவர் மீனாட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×