என் மலர்
நீங்கள் தேடியது "இடுபொருட்கள்"
சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
சேலம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.
அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770 மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.