என் மலர்
நீங்கள் தேடியது "ஒடிசா ரெயில் விபத்து"
- ஒடிசா மாநிலத்தில் விரைவு ரெயில்கள் தடம்புரண்டு விபத்தில் சிக்கின.
- மீட்புப் பணிகளுக்காக பேரிடர் மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது.
சென்னை:
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா- சென்னை ரெயில் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து ஒடிசா முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அப்போது தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார்.
கோரமண்டல் ரெயில் விபத்தில் 800க்கும் அதிகமானோர் சென்னை வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர் என தகவல் வெளியானது.
ரெயில் விபத்து எதிரொலியாக 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்ச சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை ஒடிசா விரைய வலியுறுத்தியுள்ளார். இந்தக் குழு நாளை விமானம் மூலம் ஒடிசா சென்றடைகிறது.
- மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என ஒடிசா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
- 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
- சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.
- நாட்டின் மிகப்பெரிய ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.
- கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால், ஆண்டு முழுக்க நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு மற்றும் தி.முக. கட்சி சார்பில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் ரெயில் விபத்து காரணமாக, சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதி நினைவிடம் மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
- நாட்டையே உலுக்கிய ரெயில் விபத்தின் தற்போதைய நிலை குறித்து தலைமை செயலர் விளக்கம்.
- விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஒடிசா தலைமை செயலாளர் ஜெனா பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது..,
"ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. ரயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."
"விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.
- ஒடிசா கோர விபத்தில் இதுவரை 233க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
- 3 ரெயில்கள் விபத்து என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 233க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன. 30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 3 ரெயில்கள் விபத்து என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்திய ரெயில்வே வரலாற்றிலேயே ஒடிசா ரெயில் விபத்து மிக கொடூரமான விபத்தாக கருதப்படுகிறது..
இதுவரை நிகழ்ந்த நாட்டின் கோர ரெயில் விபத்துகள்:-
* 1981-ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி அன்று, பீகாரில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. பாலத்தை கடக்கும்போது பாக்மதி ஆற்றில் ரெயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
* 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று, புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சுமார் 305 ஆகும்.
*1998-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபில் உள்ள கன்னாவில் உள்ள ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட மூன்று பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.
*1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அன்று வடக்கு எல்லை ரயில்வேயின் கதிஹார் பிரிவில் உள்ள கைசல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது பிரம்மபுத்திரா மெயில் மோதியதில் கெய்சல் ரெயில் விபத்து ஏற்பட்டது. இதில் 285க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் பலர் ராணுவம், பாதுகாப்பு படையினர் ஆவர்.
*2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று, கான்பூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயமடைந்தனர்.
*2010ம் ஆண்டு மே 28ம் தேதி அன்று, ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மும்பை நோக்கிச் செல்லும் ரெயில் ஜார்கிராம் அருகே தடம் புரண்டது. அப்போது எதிரே வந்த சரக்கு ரெயிலில் மோதி 148 பயணிகள் உயிரிழந்தனர்.
*2002ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அன்று ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்சில் தாவே ஆற்றின் பாலத்தின் மீது தடம் புரண்டதில் ரபிகஞ்ச் ரெயில் விபத்துக்குள்ளானாது. இதில், 140-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத நாசவேலையே காரணம் என கூறப்படுகிறது.
*1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரெயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126 பேர் உயிரிழந்தனர்.
- ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு.
- விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் கோரமான ரெயில் விபத்தாக இது மாறி இருக்கிறது.
மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மத்திய மந்திரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது..,

"ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில், ரயில்வே, மத்திய, மாநில பேரிடர் படைகள் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 ரெயில்கள் விபத்து தொடர்பாக விசாரணை செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும்."
"ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், காயமுற்ற பயணிகளுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இறந்தவர்கள் விவரம் கண்டறியப்பட்டதும், அவர்களது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.
- ரெயில் விபத்தில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
- ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த ரெயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்களில் பலரும் பாலாசோர் மற்றும் அதை சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைபடுகிறது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனை அறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ரத்த தானம் செய்தனர். இதனை ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருப்பதாகவும் கூறினார். தற்போது இப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் யூனிட் ரத்தம் இருப்பதாகவும், தேவைப்படுவோருக்கு அவை உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
- ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.
- ரெயில் விபத்தில் காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மு.க. ஸ்டாலின்.
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையே பெரும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது. ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சம்பவ இடம் முழுக்க இரத்தம், மனித உடல்களின் துண்டிக்கப்பட்ட உறுப்புகள் என்று கோரமாக காட்சியளிக்கிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
விபத்தில் சிக்கி, நூலிழையில் உயிர்பிழைத்தோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதனிடையே மீட்பு பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விபத்துக்குள்ளான ரெயிலில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

விபத்து ஏற்பட்டதும் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதனிடையே சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின் கூறியதாவது..,
"ஒடிசா ரெயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசினேன். ஒடிசாவில் தங்கியிருந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது."
"மாநில அரசின் கட்டுப்பாட்டு அறை நேற்றிரவு முதல் செயல்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உதவி அழைப்புக்காக செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டு இருக்கிறது."
"ஒடிசா மாநில தலைமை செயலாளர் உடன் கானொலி காட்சி வாயிலாக தமிழக அரசு பேசியது. ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்குரூ. 5 லட்சம் இழப்பீடு. காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.
- ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250-க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இரும்புப் பெட்டிகளைப் போலவே
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2023
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது#TrainAccident