search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசுக்கட்டுப்பாட்டுத்துறை"

    நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிரடி 10 சாயப்பட்டறை இடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிரடி நடவடிக்கையால் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு சாயம் போட 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில சாயபட்டறைகள் அனுமதி பெற்றும், பல பட்டறைகள் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமலும், கழிவுநீரை காவிரியில் கலக்க விடும் பட்டறைகள் மீது அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் பொக்லின் உதவியுடன் இடித்து வந்தனர். அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் செயல்படக்கூடாது என அறிவித்தும், தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் சாயக்கழிவு நீரை காவிரியில் கலக்க விடுகிறார்கள். இது சம்பந்தமாக பலரிடம் நேரில் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து செயல்பட்டதால் மாசுக்கட்டுபாட்டு வாரிய மாவட்ட அலுவலர் மோகன், தாசில்தார் தமிழரசி தலைமையில் நடராஜா நகர், கம்பன் நகர், ஓலப்பாளையம், ஆனங்கூர் ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை உள்ளிட்ட பகுதியில் பொக்லின் உதவியுடன் 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டது.

    இதில் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் வினோத்குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×