என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் பொதுமக்கள் மனு"
- பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
மேலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.