என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 ஆண்டு சாதனை"

    பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனையை முன்னிட்டு மன்னார்குடியில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விழா பா.ஜனதா கட்சியினர் சார்பில் நடந்தது.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  பிரதமர்  நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் தூய்மை பணியாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
     
    மாவட்ட தலைவர் எஸ்.பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர் வி.கே. செல்வம், அரசு தொடர்பு பிரிவு  மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி  சிவகாமராஜ் ,  நகர தலைவர் இரா இரகுராமன் , நகர பொதுச் செயலாளர்கள் எம்.எஸ். ஜெயராமன், யூ.கோகுல் , நகர செயலாளர் எஸ். ஸ்ரீபாலாஜி , கூத்தாநல்லூர் நகர தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×