என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகானந்தம்"

    • மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.
    • புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இப்போது மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் `கல்லூரி கனவு 2024' நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

    சென்னையில் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அப்போது முருகானந்தம் பேசியதாவது:-

    அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் காரணமாக மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்து உள்ளது. வறுமையின் காரணமாக பெண்கள் உயர் கல்வி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. பஞ்சாலைகளில் பெண்கள் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலை இருந்தது.

    ஆனால் இப்போது புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கபடுகிறது. அதன் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நாங்கள் படிக்கும்போது விழிப்புணர்வு தெரியாது. இப்போது அதிக விழிப்புணர்வு அரசால் ஏற்படுத்தபடுகிறது. உயர் கல்வியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது மாணவ-மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    புதுமைப்பெண் திட்டம் போல, இந்த ஆண்டு முதல் உயர் கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ப்ளஸ் டூ முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் கல்லூரிகளில் அதிகரித்துள்ளது. இதே போல் ஜூலை மாதம் முதல், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் நிகழ்ச்சி இன்று திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

    நாளை திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடு துறை, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 11-ந் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர் மாவட்டங்களில் 13-ந் தேதி ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவ்தாஸ் மீனா ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
    • தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்.

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில், தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பா.ஜ.க. சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பாரதிய ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது.

    இதற்காக மாவட்டம் தோறும் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறோம்.

    கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கடந்த வாரம் சென்னையில நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததுமே சாட்சி.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 200 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமே இருந்தன. தற்போது இது 1700 ஆக உயர்ந்துள்ளது. பாஜ.க. ஆட்சியில் இந்தியாவில் வாரத்துக்கு ஒரு பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.

    பா.ஜ.க. சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வோம். அ.தி.மு.க.வினர் உடனான கூட்டணி சித்தாந்த அடிப்படையில் இல்லை. அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வை குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கைகளை வெளியிடக்கூடாது.

    மக்களுக்கு எதிரான தி.மு.க.வுடன் நாங்கள் நேரடியாக மோதுகிறோம். அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிட உள்ளோம்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரவுடியிசம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது இயலாத ஒன்று என வனத்துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×