என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia Ukraine war"

    • உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது.
    • ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது.

    பல மாதங்கள் ஆனபின்பும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    இதற்கிடையே அமெரிக்க அரசு உக்ரைனுக்கு 2.17 பில்லியன் அளவுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்த உதவியின் போது தங்களுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் கோரி இருந்தது.

    முதலில் இதனை வழங்க தயக்கம் காட்டிய அமெரிக்கா இப்போது, அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது.

    ஏற்கனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு வழங்க உள்ள ஆயுதங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டாங்கிகள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளது.

    இதன்மூலம் இனி ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
    • உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது.

    பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் ரஷியா தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது. உக்ரைனை எப்படியும் பிடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய அதிபர் புதின் கொல்லப்படுவார் என்ற பரபரப்பான தகவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உக்ரைன் போர் காரணமாக புதின் மீது அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

    பதவியில் இருக்கும் போது அவருக்கு ஒரு பலவீனமான காலம் வரும். இந்த தருணத்தின் போது புதினுக்கு நெருக்கமானவர்களால் அவர் கொல்லப்படலாம். இது நிச்சயம் நடக்கும். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது பற்றி தெரியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஜெலன்ஸ்கி கருத்துக்கு அரசியல் நோக்கர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். புதின் தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்து உள்ளார். இதனால் ஜெலன்ஸ்கி சொல்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கூறி உள்ளனர்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
    • உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நோட்டோ அமைப்பில் உள்ள முதல் நாடு போலந்து ஆகும்.

    வார்சா:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு நான்கு மிக்-29 போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நோட்டோ அமைப்பில் உள்ள முதல் நாடு போலந்து ஆகும்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    80 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக கணித்துள்ளோம். பக்முத் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் முயற்சி தோல்வி அடைந்தது ரஷ்யாவால் முக்கியத்துவம் வாய்ந்த எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றார்.

    • உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • ஹெலிகாப்டர் பாகம் தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியது. உக்ரைன் ராணுவமும் கடுமையாக போரிட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரஷியாவின் ஹெலிகாப்டர், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷிய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் ரஷிய ஹெலிகாப்டர் (எம்.ஐ.-8), சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடந்தது. பிரையன்ஸ்க் பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறும்போது கிளிண்ட்சி நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 5 வீடுகள் சேதமடைந்தன. ஒரு பெண், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

    இதற்கிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா பகுதியில் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் கூறும்போது, 'நான்கு ரஷிய விமானங்கள் வானத்தில் இருந்து சுடப்பட்டது.

    ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர் என்றார். இதை உக்ரைன் தரப்பும் உறுதி படுத்தியது.

    உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறும் போது, ரஷியர்கள் இன்று மிகவும் வருத்தமடைந்துள்ளனர். அவற்றை நாம் புரிந்து கொள்ளமுடியும். இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு போர் விமானங்கள் குறைந்துள்ளன என்றார்.

    இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே ஹெலிகாப்டர் பாகம் தீப்பிடித்து வானத்தில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
    • பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

    இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது. இதில் ரஷிய தனியார் படையான வாக்னர் குழுவினர் ஈடுபட்டனர்.

    அவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடுமையாக போரிட்டது. சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷியாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.

    பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டோம். அந்த நகரின் ஒவ்வொரு வீடும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இனி ஓய்வு எடுப்பதற்காகவும், மறுபயிற்சி பெறுவதற்காகவும் வாக்னர் குழுவினர் வருகிற 25-ந்தேதி பக்முத் நகரில் இருந்து வெளியேறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தகவலை அவர் ராணுவ உடை அணிந்து ரஷிய கொடி மற்றும் வாக்னர் படையின் சின்னங்களை ஏந்தியவாறு வீடியோவில் பேசி தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் பக்முத் நகரை முழுமையாக ஆய்வு செய்து தேவையான தற்காப்பு கோடுகளை உருவாக்கி அந்த நகரை ராணுவத்திடம் ஒப்படைப்போம் என்று ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார். பக்முத் நகரை கைப்பற்றி இருக்கும், ரஷிய படைக்கு அதிபர் புதின் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பக்முத் நகரம் முழுமையாக ரஷிய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல். அங்கு உக்ரைன் படையினர் இன்னும் சண்டையிட்டு வருகிறார்கள் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.
    • எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாஸ்கோ:

    உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. ரஷியா வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி வருகிறது.

    மேலும் ரஷிய எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. நேற்று மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது.

    இந்த நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    ரஷியாவின் எல்லை காவலர் தின வாழ்த்து செய்தியில் புதின் கூறும் போது, ரஷிய கூட்டமைப் பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபமான உதவி, கட்டுமானப் பொருட்கள் உள்பட ராணுவ மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை உறுதி செய்வது அவசியம். அந்த எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார்.

    இதற்கிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில்தான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷிய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.
    • ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.

    அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.

    ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. இது உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிக பயங்கரமான தாக்குதல் ஆகும். குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ரஷியாவின் வெடுகுண்டு தாக்குதலில் அணை உடைந்து, தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால் கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • உக்ரைன், ரஷியா அதிக தாக்குதலுக்கு அதிக அளவில் டிரோன்களை பயன்படுத்துகின்றன
    • தற்போது நடைபெற்ற தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்

    ரஷியா- உக்ரைன் போரில் தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் சிலர் காயம் அடைந்தனர்.

    பதிலுக்கு ரஷியாவும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் இன்று இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்மேற்கு ரஷியாவின் மத்திய வொரோனெஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் அந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாகவும், 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஷியாவுக்கு ஈரான் டிரோன்கள் வழங்கி வருகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு
    • உக்ரைன் மீதான போருக்குப்பின் வழங்குவதை நிறுத்துவிட்டோம் எனக் கூறுகிறது ஈரான்

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது.

    மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது.

    தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

    மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அநேகமாக கட்டப்பட இருக்கும் இடம் இதுவாகத்தான், ஒரு இடத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

    உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷியா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார்.

    ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷியாவுக்கு டிரோன் வழங்கி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    ஆனால் ஈரான் தொடர்ந்து ரஷியாவுக்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த டிரோன்கள் ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

    • ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது
    • ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராம டோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    அப்போது ஓட்டலுக்குள் ஏராளானோர் இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    • ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.
    • எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.

    மின்ஸ்க்:

    உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு போரிட்டது.

    இதற்கிடையே தங்களது குழு மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் குற்றசாட்டி ரஷியாவில் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

    இதையடுத்து அக்குழுவின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரிகோஷின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக எவ்ஜெனி ரிகோஷின் அறிவித்தார். ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே வாக்னர் குழு வீரர்கள் ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம் அல்லது தங்களது குடும்பங்களுடன் செல்லலாம் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷியாவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.

    அவர் சென்ற ஜெட் விமானம் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகா ஷென்கோ கூறும் பாோது, வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.

    சமரச பேச்சின் போது பிரிகோஷினிடம், வாக்னர் படை ரஷிய தலைநகருக்குள் நுழைந்ததால் அவரது வீரர்கள் அழிக்கப்படுவார்கள். பாதி வழியிலேயே நசுக்கப்பட்டு விடுவீர்கள் என்று தெரிவித்தேன். வாக்னர் வீரர்களுக்கான முகாம்கள் பெலாரசில் அமைக்கவில்லை. தேவைப்பட்டால் சில வளர்ச்சியடையாத பகுதிகள் வழங்கப்படும் என்றார்.

    ×