என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surandai"

    • சுரண்டையை அடுத்த அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா
    • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா(வயது 45). கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரது உறவினர்கள் பிச்சையா உடலை அங்குள்ள சுடுகாட்டில் தீவைத்து எரித்தனர். பாதி உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த சுரண்டை போலீசார், பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக அச்சங் குட்டம் கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி ராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி டிரஸ்டி, தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    சுரண்டை:

    வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில் கைப்பந்து போட்டியில் சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தொடர்ந்து கடந்த 21-ந்தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதிலும் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.இதன் மூலம் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் டிரஸ்டி, தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

    • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
    • இதனால் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி 26-வது வார்டு பகுதியில் நடந்த நகர சபா விழாவிற்கு வார்டு கவுன்சிலரும், தி.மு.க. நகர செயலாளருமான ஜெயபாலன் தலைமை தாங்கினார். இதில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். இதனால் சுகாதார பணியாளர்களின் ஆரோக்கியம் மேம்படும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளதால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதனால் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். 26-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக 2 வண்ணங்களில் குப்பை கூடை வழங்கிய நகர் மன்ற உறுப்பினர் ஜெயபாலனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதி நாயகம், வேலுச்சாமி, வைகை கணேசன், மாரியப்பன், செல்வகுமார், முருகன், முத்து சுப்பிரமணியன் மற்றும் பரப்புரையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது
    • எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன், ஜெயராஜ், சங்கரநயினார், வெள்ளத்துரை பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதிநாயகம், வைகை ஜேம்ஸ், பிரம்மா, முத்து சுப்பிரமணியன், கணேசன், வேலுச்சாமி, பெடரல் கார்த்திக், சுடலைமுத்து, எழில், செல்வகுமார், ராஜன், பவுன், மாரியப்பன், முத்து சுப்பிரமணியன், முருகன் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • துறவி வீரமாமுனிவர் போட்டி தென்காசி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து சுமார் 52 மாணவ- மாணவிகள் 15 போட்டிகளில் பங்கேற்றனர்

    சுரண்டை:

    துறவி வீரமாமுனிவர் போட்டி தென்காசி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து சுமார் 52 மாணவ- மாணவிகள் 15 போட்டிகளில் பங்கேற்றனர். இதில் பேச்சுப் போட்டியில் அக்சயா,அக்ஷரா செண்பா,நிரஞ்சனா, தனிப்பாடல் ஆதர்ஷனா, வரைதல் போட்டியில் நிபாஷினி, கவியரசி ஆகியோரும் குழு நடனத்தில் அக்ஷய்யா ரேணுகா, ஸ்டெனா, ஹரிணி, ராஜலட்சுமி, ருக்ஷானா பவானி, புகழ் பாரதி, தேவி பார்கவி, நித்ய ஸ்ரீ ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறந்த பள்ளிக்கான சிறப்பு கேடயத்தையும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

    • மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை, எஸ்.ஆா்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனம், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல், கதை மற்றும் கவிதை கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிாியா் மாரிக்கனி சிறப்புரையாற்றினார். மாணவி தாரசா மீனாட்சி வரவேற்று பேசினார். வழங்கினாா், மாணவி அழகு லச்சிதா நன்றி கூறினார். மாணவி அஸ்வினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிாியைகள் மகாராணி மற்றும் அபிதா ஆகியோர் செய்திருந்தனா்.

    • தென்காசி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • நகராட்சி தலைவர் வள்ளி முருகன் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    சுரண்டை:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் தற்பொழுது ஆங்காங்கே காய்ச்சல் பரவி வருகிறது. நகராட்சி தலைவர் வள்ளி முருகன் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கி பேசும்போது, பொதுமக்கள் நலன் கருதி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படும். நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், வார்டு உறுப்பினர்கள் வேல் முத்து, அமுதா சந்திரன்,ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செம்மண் செங்கல்களுக்கு பதிலாக கிராமபுறங்களில் அதிகளவில் தற்போது பிளை ஆஷ் பிரிக்ஸ் எனும் நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாகி வரும் உலர் சாம்பல் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் செங்கல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
    • 4 மாவட்டங்களில் மட்டும் 192 நிறுவனங்கள் இந்த வகை செங்கலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுரண்டை:

    தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செம்மண் செங்கல்களுக்கு பதிலாக கிராமபுறங்களில் அதிகளவில் தற்போது பிளை ஆஷ் பிரிக்ஸ் எனும் நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாகி வரும் உலர் சாம்பல் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் செங்கல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

    2 லட்சம் தொழிலாளர்கள்

    இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் 192 நிறுவனங்கள் இந்த வகை செங்கலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த நிறுவனங்களை சார்ந்து தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

    தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிகளில் அதிகளவில் இயங்கி வரும் பிளை ஆஷ் பிரிக்ஸ் நிறுவனங்களுக்கு தொழில் நலிவடைவதில் இருந்து காக்க தமிழக அரசு முனைப்பு காட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். இது குறித்து சுரண்டையை சேர்ந்த சக்திவேல் பிரிகாஸ்ட் இன்டஸ்ட்ரீஸ் தயாரிப்பாளர் சக்தி வேல்ராஜ் கூறியதாவது:-

    சரிவை நோக்கி

    பிளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மற்றும் நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையங்களில் பயன்படுத்திய நிலக்கரியில் இருந்து கழிவு பொருட்களாக கிடைத்த உலர் சாம்பல் எனும் மூலப்பொருள் சிறிய நிறுவனங்களுக்கும் தாராளமாய் கிடக்கும் சூழ்நிலை இருந்து வந்தது.

    அதன் பின்பு பல்வேறு காரணங்களால் அந்த நடைமுறை தற்போது தடைபட்டு உள்ளதால் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் மூலப்பொருட்கள் மொத்தமாக கிடைத்து விடுகிறது. அப்படி இல்லை என்றாலும் உலர் சாம்பல் மூலப் பொருட்கள் கடலில் கொட்டப்படுகிறது.

    இந்த பிளை ஆஷ் பிரிக்ஸ் வகை செங்கல்கள் இயற்கைக்கு உகந்ததாகவும், தரமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியில் இருந்து கழிவு பொருளாய் கிடைக்கும் உலர் சாம்பல்களை ஈ- டெண்டர் மூலம் ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு தொடர்ந்து மத்திய- மாநில அரசுகள் வழங்கி வருவதால் அதனை முறைப்படுத்திட தமிழக அரசும் மத்திய அரசும் முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுரண்டை நகராட்சிக்கு வருமானத்தை அதிகப்படுத்தும் படி அரசு அதிகாரிகள் முறையாக கட்டிட அனுமதி வழங்க வேண்டும்.
    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைக்கப்படும் தண்ணீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், ஆணையாளர் பாரி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் 26-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெயபாலன் பேசும்போது, டெண்டர் விடப்பட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கூறினார்.

    20-வது வார்டு கவுன்சிலர் பரமசிவன் பேசும்போது, சுரண்டை நகராட்சிக்கு வருமானத்தை அதிகப்படுத்தும் படி அரசு அதிகாரிகள் முறையாக கட்டிட அனுமதி வழங்க வேண்டும். அனுமதி இல்லாத பகுதிகளில் பத்திரத்தை வைத்து தீர்வை ரசீது வழங்கும் பட்சத்தில் உரிய கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டும்.பொது மக்களை தேவையில்லாமல் நகராட்சி நிர்வாகம் அலைய வைக்கக்கூடாது என்றார்.

    15- வது வார்டு உறுப்பினர் பொன்ராணி கூறும்போது, தொடர்ந்து தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எந்த திட்டப் பணிகளும் நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.சுரண்டை நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைக்கப்படும் தண்ணீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் எனவும் பொதுவான கோரிக்கையாக வார்டு உறுப்பினர்கள் வைத்தனர்.

    தொடர்ந்து பேசிய நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் கூறும் பொழுது நகராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும்,நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு வருகிறது.

    தற்பொழுது மழைக்கால மாக இருப்பதால் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.டெண்டர் விடப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கும் என கூறினார். குடிநீர் மற்றும் சாலை பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நகர் மன்றம் செயல்படும் என கூறினார்.


    • வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • நடுவக்குறிச்சி சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வேலப்பநாடாரூர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் ஜீவானந்தம்(வயது 24).

    நாய் குறுக்கே பாய்ந்தது

    இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். தினமும் வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    நடுவக்குறிச்சி சாலையில் சென்றபோது எதிர்பாரா தவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதனால் ஜீவானந்தம் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நாய் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜீவானந்தம் படுகாயம் அடைந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவரது உறவின ர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • பிரதமரின் கல்வி திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற்றது.
    • ஸ்ரீஜெயந்திரா பள்ளி மாணவி மனோன்மணி மாநில அளவில் 24-வது இடத்தையும், தனுசியா 50-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    சுரண்டை:

    தேசிய அளவில் நடைபெற்ற பிரதமரின் கல்வி திட்டத்திற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற்றது.இத்தேர்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 232 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சுரண்டை ஸ்ரீஜெயந்திரா பள்ளியில் பயிலும் மனோன்மணி என்ற மாணவி மாநில அளவில் 24-வது இடத்தையும், தனுசியா என்ற மாணவி மாநில அளவில் 50-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளை டிரஸ்டி, தாளாளர்,முதல்வர் ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.

    • சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கம் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
    • சிறப்பு விருந்தினராக தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்.

    சுரண்டை:

    சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கம் புதிய கட்டிட திறப்பு விழா, நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு விழா மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கு நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்குகிறார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை தங்கையா நாடார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமையில் நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் ராமர், துணைத்தலைவர் ஜெயக்குமார், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.

    ×