என் மலர்
நீங்கள் தேடியது "Kadayanallur"
- கடையநல்லூர் ரஹ்மானியபுரத்தை சேர்ந்த சுலைமான் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
- தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரஹ்மானியபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் கடையநல்லூர் அட்டை குளம் நெடுஞ்சாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் .
அதன் பின்னர் இரவு காலை 11 மணிக்கு ஒர்க் ஷாப்பில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்தது. கார், டிராக்டர் டீசல் டேங்க் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது .
இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செங்கோட்டை யில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள பெட்ரோல் பல்க் மற்ற வேலைக்கு வந்த புதிய டிராக்டர்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்தில் டிராக்டர் . கார் ஆகியவை முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. அருகில் நின்ற லாரியின் பிற்பகுதி முழுமையாக எரிந்தது. விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது கார் பேட்டரி ஷாட் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிகழ்ச்சிக்கு மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார்.
- முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கினார்
கடையநல்லூர்:
கடையநல்லூர், மெயின் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடத்தப்படும் ஜாமிஆ அன் நஜாஹ் அரபிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பஷீர் அஹ்மத் உமரி தொகுத்து வழங்கினார். மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி செயலாளர் முஹம்மது காசிம் சின்சா, பேராசிரியர்கள் ஜபருல்லாஹ் பத்ரி, முஹிபுல்லாஹ், மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் முஹம்மது கோரி வரவேற்று பேசினார்.
முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், அப்துல் மஜீத், கஸ்ஸாலி முஹம்மது கோரி, முஹம்மது யஹ்யா, ரபீக் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கோவிலின் தை தேரோட்ட திருவிழா கடந்த 15 -ந் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன .
விழாவின் 9-ம் நாளான நேற்று ஓம்சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர். புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜய்குமார், புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.தேரோட்டத்தை காண்பதற்க்கு சுற்று வட்டார கிராமபகுதி மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் லதாவிடம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர்.
- கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக ரூ.50 கோடி வழங்க முதல்-அமைச்சர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நிதி கோர உள்ளதாக தெரிவித்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகரா ட்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் வந்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் லதாவிடம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை செய்தனர். அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் மாவட்டச் செயலாளர் சிவபத்ம நாதன் கூறியதாவது:-
கடையநல்லூர் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் பணிகள்அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்திட நகர்மன்ற தி.மு.க. உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று கடையநல்லூர் நகராட்சி 33 வார்டுகளுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறப்பு உதவித் தொகையாக ரூ.50 கோடி வழங்க முதல்-அமைச்சர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து நிதி கோர உள்ளதாக தெரிவித்தார்.
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.8 லட்சம் வீதம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் பேருந்து நிழல் கூரை அமைப்பதற்காக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்குதல் மற்றும் நகராட்சி பகுதியில் தலா ரூ.4.,20 லட்சம் வீதம் 8 இடங்களில் ரூ.68.6 லட்சம் வீதம் உயர் மின் கோபுரம் என மொத்தம் ரூ.81.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தெரிவித்தார்.
இதற்கான இடங்களை தேர்வு செய்ய நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பொறியாளர் லதாவிடம் கேட்டுக்கொண்டார். அப்பொழுது உதவி இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் ,நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், கண்ணன், முகமது அலி, 17-வது வார்டு செயலாளர் பெருமாள்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்யது மக்தூம் பெரிய பள்ளி வாசல் கந்தூரி விழாவில் ரஜப் முதல் பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது.
- தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் உள்ள பிரசித்திபெற்ற செய்யது மக்தூம் பெரிய பள்ளி வாசல் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
கடந்த 23-ந் தேதி ரஜப் முதல் பிறை கொடி ஊர்வலம் நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு முதல் பிறை கொடியேற்றம் நடைபெற்றது.
நேற்று 10-வது நாள் கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடையநல்லூரில் உள்ள பேட்டை, ரஹ்மானி யாபுரம் பெரிய தெரு, புதுத்தெரு, பஜார் ரோடு, தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணாபுரம், உட்பட பல்வேறு இடங்களுக்கு யானை மீது பச்சை களை ஊர்வலமும் சந்தனக் கூடும் நடைபெற்றது . இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் தீன் ஒலி முழங்க கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது.
இன்று( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தீப உற்சவம் நடைபெறும். நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மவுலூது சரிப் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை பகல் தப்ரூக் என்னும் நேர்ச்சை வழங்கப்படும்.
- கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி முகிலா.
- முகிலாவுக்கு திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
நெல்லை:
கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி முகிலா(வயது 19).இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தபோது பாஸ்கரனை காதலித்து வந்துள்ளார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதில் முகிலா கர்ப்பமானார். இதையறிந்த அவரது தந்தை மூக்காண்டி(40), முகிலாவை பாஸ்கரனின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால் அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் 17-ந்தேதி பாஸ்கரன்-முகிலாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திடீர் சாவு
பாஸ்கரன் லோடுமேன் வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த முகிலா படுத்திருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் மற்றும் அவரது பெற்றோர் முகிலாவை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே முகிலா எவ்வாறு இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது.
- நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது. இதில் 17 வார்டுகளில் தனியார் தூய்மை தொழிலாளர்கள் 82 பேர் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.340 ரூபாய் வீதம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கூலி உயர்வு, பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீட்டு அட்டை, சீருடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீட்டு அட்டை, சம்பள உயர்வு கேட்டு கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. குப்பைகளை அள்ளும் எலக்ட்ரிக் வாகனம் பழுதடைந்தால் தொழி லாளர்களே அதனை சரி செய்ய வேண்டுமென தனியார் நிறுவனம் கூறு வதாக கூறி அதனை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதுகுறித்து நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனியார் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிரந்தர துப்புரவு தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடை பெற்று வருவதாக நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
- பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகரில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
- முகாமில் மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகரில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கடையநல்லூர் நகர் மன்றத்தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் ஷீலா, ஆர்.டி.ஓ. கங்காதேவி, தாசில்தார் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கடைக்கோடி மக்களுக்கும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கென ஒவ்வொரு மாதமும் மனுநீதி நாள் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்தந்த கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அவை மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என பரிசீலனை செய்து மனுநீதி நாள் அன்று தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன், நகர்மன்ற கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீரான் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
- கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
- இதில் 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் செய்யது மசூது சாகிப், சித்திக், சாகுல்கமீது, சகீர், அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமில் வரவேற்றார். பேச்சியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ஆசிரியர் இப்ராஹிம், டாக்டர் சஞ்சீவி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமீன், முன்னாள் ஆசிரியர் முகைதீன், அக்பர் அலி, முன்னாள் மாணவர் ஜமால் ஆகியோர் பேசினர். இதில் சுமார் 60 முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பைசல், உபைதுல்லா, சாகுல், மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் இஸ்மாயில் நன்றி கூறினார்.
- கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
- கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகக்குழுத் தலைவர் பத்ஹீர் ரப்பானி தலைமை தாங்கினார். ஈரோடு முகம்மது ஹஸன் அலி, தென்காசி மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் வி.டி.எஸ்.ஆர் முகம்மது இஸ்மாயில், கயத்தாறு பி.எச். சுல்தான், கடையநல்லூர் தொழில் அதிபர்கள் ஏ.ஐ.கே.அமானுல்லா, கே.நயினா முகம்மது, கே.ஏ.ஜாபர் சாதிக், எஸ்.மக்தும், இப்ராஹிம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட அரசு ஹாஜியுமான முஹ்யித்தீன் ஹஜரத் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபுபக்கர், கீழக்கரை சீனாதானா செய்யிது அப்துல் காதிர், சென்னை குரோம்பேட்டை காயிதேமில்லத் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என்.முகம்மது காசிம், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சென்னை எஸ்.முகம்மது ரபீக் பேராசிரியர் ப.அ.முகம்மது இக்பால், தென்காசி ஹாஜி முஸ்தபா குருப்ஸ் எஸ்.எம். கமால் முகைதீன் ஆகியோர் பேசினார்கள்.
சென்னை சுன்னத் ஜமாஅத் பேரியக்க தலைவர் டாக்டர் எஸ்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்வகாப், அச்சன்புதூர் அக்பர்அலி முகைதீன் பள்ளி இமாம் இப்ராஹிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) தென்காசி பாரிஜான், மேலாளர் சண்முகவேல், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் லீக் அக்பர் அலி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், சுபா ராஜேந்திரன் எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்படப் பலர் பேசினார்.
அப்போது தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்றனர். உறுப்பினர்களின் கேள்விக்கு கடையநல்லூர் நகர் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடப்பதாக நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
- கடையநல்லூர் நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நெல்லை:
கடையநல்லூர் நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வரவேற்றார். நகர அவைத்தலைவர் பெட்டி முருகன், துணை செயலாளர்கள் காசி, காமாட்சி, மஸ்தான் அலி, துணைத் தலைவர் ராசையா, முருகையா, பொருளாளர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, பேச்சாளர் வேங்கை சந்திரசேகர் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தென்காசி நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், அருணாசல பாண்டியன், சிங்கிலிப்பட்டி மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.