என் மலர்
நீங்கள் தேடியது "D.M.K."
- இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம்
- தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சினார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநெற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசன், துணை அமைப்பாளர் லூயி கதிரவன், சசிகுமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியதாவது:
தமிழ் மொழியின் படைப்புகள் பல்வேறு நாடுகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு வரும் அறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மறைந்த மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காக தன்னுயிரை விட்டவர். அவர் வாழ்ந்த மண்ணில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். வங்கி, தபால் நிலையங்களில் பலரும் இந்திகாரர்களே பணியில் உள்ளனர். அங்கு தமிழர் செல்லும் போது எதுவும் புரியாமல் தவிக்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் என்பது தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கமாகும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்பதே எங்கள் கொள்கையாகும். பிரதமரை சந்தித்த போது தமிழக முதல்வர் முதல் கோரிக்கையாக வைத்தது நீட் வேண்டாம் என்பது. இருமொழி கொள்கையை வர வேற்போம். இந்தி திணிப்பு என்று வந்தாலும் தொடர்ந்து தி.மு.க. எதிர்த்து நிற்கும் என பேசினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட துணை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
- தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்
- நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை சேர்ந்த முன்னாள் தி.மு.க. வரகூர் எம்.எல்.ஏ. வக்கீல் பா. துரைசாமி தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வேப்பூரை சேர்ந்த வி.எஸ். பெரியசாமி மாநில வர்த்தக அணி துணை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா பரிந்துரையின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் மேற்கண்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், டாக்டர் வல்லவன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
- தமிழ்நாடாக தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.
இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப்சாமுவேல், பரந்தாமன், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உருவப்படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ. பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 75-ம் ஆண்டு தி.மு.க. பவளவிழா இலட்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 75-வது ஆண்டு தி.மு.க. பவள விழா இலட்சினையை திறந்து வைத்து கொடியேற்றினார். இதில் இளைஞரணி மாநில நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
75 ஆண்டுகளாக தி.மு.க. இந்த சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் "அண்ணா… அண்ணா…" என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்.
ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகையா தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் கீழப்பாவூரில் சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.கே.டி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், சார்பு அணி நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.
பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங்,
மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள்,
வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,
மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால்மாரி, டைகர் வினோத்து. ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜன்பாபு, சுபேந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ராமர், கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, அதிஷ்டமணி, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், முத்துவேல், சரண்யா, ஜான், ராமும்மாள்,
விஜயலட்சுமி, ரெக்ஸின், மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வக்குமார், ஜெயசிங், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், நாராயணன், டென்சிங், மூக்கையா, மற்றும் சுப்பையா, பிரபாகர், கருணா, அல்பர்ட், ராஜா, மகேஸ்வரசிங், அருணகிரி, பாலசுப்பிரமணி, பெரியசாமி, சிவசுந்தர், இசக்கி, அற்புதராஜ், பெலின்டஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் ஓன்றிய செயலாளர் வீரபாண்டிய சரவணன், மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரதிநிதி நெல்சன் முத்து நகர் கிளை செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர் ராஜ் மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செய்திருந்தார்கள்.