என் மலர்
நீங்கள் தேடியது "தாக்கி"
கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55).
இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது.
இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.