என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330363
நீங்கள் தேடியது "தொடங்க"
குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது.
மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
இதுபற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.
இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
×

X