என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suba Veerapandian"

    • பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.
    • எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.

    தமிழ்நாட்டில் சாதி படுகொலை, ஆணவ படுகொலைகளை தூண்டி விடுபவர்கள் 2 பேர். ஒருவர் திருமாவளவன். இன்னொருவர் சுப.வீரபாண்டியன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக சுப.வீரபாண்டியன் கூறியதாவது:

    * நாங்கள் பிறந்த பிறகு தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன்னால் மனுநீதி இல்லையா?

    * மனு நீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவ படுகொலைகளுக்கு காரணம்.

    * பிரிவினை என்பதே இந்து சமயத்தின் நியதியாக இருக்கிறது.

    * பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள்.

    * பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா.

    * அவர் எங்களை பார்த்து குற்றம்சாட்டுவதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது.

    * இப்படி பேசுவது கருத்து உரிமையில்லை. அவதூறு.

    * எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.

    * எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவர் நாகரீகமாக பேசினால் தான் ஆச்சரியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
    • 2023-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஏற்கும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள அருள்புரம், தெற்குபாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இயக்க கொடியேற்று விழா, மற்றும் குப்புசாமி நாயுடுபுரத்தில் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் மா.பிரகாஷ் தலைமை வகித்தார்.

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், மாநில மகளிரணி அமைப்பாளருமான தேன்மொழி, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், முகில்நிலா மணிகண்டன், குட்டிபழனிசாமி, ஜாகீர், கவியரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நாகக்குமார் வரவேற்றார்.

    மாவட்ட பொருளாளர் தென்றல் சேகர் கூட்ட விளக்க உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் சிற்பி அர.செல்வராஜ், ஆ.சிங்கராயர், அமைப்பு செயலாளர் கா.சு.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

    அலுவலகத்தை திறந்து வைத்து மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: நாட்டிற்கு முன்பை விட கூடுதலாக பெரியார் தேவைப்படுகிறார். கர்நாடகா மாநிலத்தில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கூறி பொதுக்கூட்டத்தில் பேச வந்து இருந்த பஞ்சாப் மாநில விவசாய சங்க தலைவர்களை அம்மாநில ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

    சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கிறது. இச்சம்பவம் வேதனையை அளிக்கிறது. இதனை நாம் புறம்தள்ளி விட முடியாது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் கால் பதித்து விடலாம் என்று நினைக்கும் காவி கூட்டம் தமிழகத்தில் மட்டும் கால் பதிக்க முடியாமல் தவிக்கிறது. ஆனால் இங்கும் ஏதாவது செய்து மத மோதல்களை உருவாக்கி, சாதி பகையை ஊக்குவித்து தமிழகத்திலும் வந்து விட வேண்டும் நினைக்கிறார்கள் அது நடக்காது. நடக்கவும் கூடாது.

    இது பெரியார் மண்ணாக முதல்வர் சொல்கின்ற திராவிட மாடல் ஆட்சி நடக்கிற மண்ணாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்தை ஊர் ஊராக, திண்ணை திண்ணையாக எடுத்து செல்லும் பணியை திராவிட இயக்கத் தமிழர் பேரவை செய்யும். ஜனநாயகத்தில், மத நல்லிணக்கத்தில், சமூக நீதியில் ஒத்த கருத்துடையவர்களாக உள்ளவர்கள், மத மறுப்பு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஏற்கும்.

    கடவுள் நம்பிக்கை இருக்கும் சமூக சிந்தனையாளர்களை இழந்து விடக்கூடாது என்பதற்காக தான் திராவிடர் நட்புறவு கழகம் உருவாக்கப்பட்டு எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடன் ஒர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    ×