search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு உறுப்பினர் கூட்டம்"

    மயிலாடுதுறையில் வளர்ச்சியடைந்த 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சியின் நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் சிறப்பு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ.முன்னிலையில் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ். குமார் வரவேற்றார். அப்போது மயிலாடுதுறை போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், புதிய பஸ் நிலையம் அமைவதற்கும், நகர வளர்ச்சியை பெருக்கவும், 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    மயிலாடுதுறை நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மயிலாடுதுறை எல்லையையொட்டி மணக்குடி கிராமத்தில் பூம்புகார்-கல்லணை நெடுஞ்சாலையில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்தின் அருகில் 13.77 ஏக்கர் பரப்புடைய தருமபுரம் ஆதீனம் பராமரிப்பில் உள்ள சக்திபுரீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய ஆவணங்களை அரசுக்கு அனுப்பப்பட்டு தருமபுர ஆதீனம் முன் நுழைவு அனுமதி பெறப்ப ட்டுள்ளது.

    இடத்திற்கு கிரைய தொகை நிர்ணயம் செய்ய அரசிடம் தற்போது கோப்பு பரிசீலனையில் உள்ளது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியினை யொட்டி யுள்ள மன்னம்பந்தல் கிராமத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

    புதிய பஸ் நிலையத்தையும் புதிய கலெக்டர் அலுவலகத்தையும் ஒட்டி புறவழிச் சாலைகள் அமைய உள்ளதால் மயிலாடுதுறை தற்போது உள்ள எல்லையினையொட்டி அமைந்துள்ளமணக்குடி, மன்னம்ப ந்தல், வள்ளலா கரம், ரூரல், பட்டமங்கலம், நல்லத்துக்குடி, சித்தர்காடு, மாப்படுகை, திருவழுந்தூர், நீடூர், ஆகிய ஊராட்சிகளை மயிலாடுதுறை நகராட்சி யுடன் இணைக்க, வளர்ச்சி மற்றும் வருவாய் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு நகராட்சியின் தரத்தை உயர்த்திட நகரமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதோடு ஆலோசனை வழங்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே நகர பகுதியின் எல்லையினை ஒட்டிய மேற்கண்ட ஊராட்சிகளின் திருஇந்தளூர், நீடூர், மாப்படுகை, சித்தர்காடு, பட்டமங்கலம், நல்லத்து க்குடி, ரூரல் ஆகியவை வளர்ச்சியடைந்த கிராம ங்கள் என்பதால் நகராட்சியுடன் இணை த்தால் நகராட்சியின் தரம் உயர்வதுடன்வருவாய் பெருகும்.

    மேற்கண்ட வளர்ச்சியடைந்த 7 ஊரக பகுதிகளுடன் மணக்குடி மன்னம்பந்தல் வள்ள லாகரம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதியினை நகராட்சியுடன் இணைக்க உரிய அரசாணை பிறப்பிக்க கோரி அரசிற்கு அனுப்பப்பட உள்ளது.

    இவ்வாறு நகராட்சி சிறப்பு மன்ற கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×