என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330643
நீங்கள் தேடியது "Research Center"
பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45-ம் ஆண்டு பேரவை கூட்டம் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பரமத்தி வேலூரில் 4 ரோடுக்கு அருகில் வெற்றிலை ஏல மார்க்கெட் உள்ளது. அதில் வெற்றிலை விவசாயிகளுடைய வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. மேலும் வியாபாரிகள் மிக அதிகமாக கமிஷன் எடுத்து கொள்கிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு பரமத்திவேலூரில் வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சார்பில் ஒரு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏற்படுத்தி நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.
இச்சங்கம் 1977 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுது பொத்தனூரில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது . பின்னர் அது சிறுமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது .அதன் பின்னர் கோவை வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.அதனால் விவசாயிகளுக்கு எந்தவித பலனுமில்லை.
முந்தைய அரசு இருக்கூர் கிராமத்தில் உள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வெற்றிலை கொடிக்கால் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள். அதனை செயல்படுத்தாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை விவசாயிகள் .அவர்களுக்கு உகந்த வகையில் பயிர் கடன் கிடைக்க வழிவகை செய்யுமாறு மாநில அரசை இப்பேரவை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 50 பேர் கொண்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்களும், அதில் 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X