என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bed"

    • கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அசாமின்  ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி. உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

    தற்போது இவர் கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அந்த அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இவ்விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.




    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த புகைப்படம் அதிகளவில் தற்போது பரவி வருகிறது. இந்தப் படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்வதாக உறுதியளித்து வரும் நிலையில், இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி இருப்பது இரு கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என புகார் வந்துள்ளது.
    • வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    * வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என புகார் வந்துள்ளது.

    * வெளி மாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையம் வாயிலாக தேர்வே எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    * வகுப்புக்கு வராதோரை தேர்வெழுத வைத்தால் பி.எட். கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

    * வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குளோபல் அகாடமி என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்களில் கூடுதலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டன.
    சேலம்:

    ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம்
    ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.

     அந்த வகையில் சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியாக செல்லும் கீழ்கண்ட 8 ரெயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை இணைத்து நிரந்தரமாக  இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22638)  நேற்று முதலும், சென்னை சென்ட்ரல் -மங்களூர் சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22637) நாளை மறுதினம் முதலும், சென்னை சென்ட்ரல்-மங்களூர் சென்ட்ரல் ரெயிலில் (12601) இன்று முதலும், மங்களூர் சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரெயிலில் (12602) நாளை முதலும், திருவனந்தபுரம்- ஷாலிமர்  எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22641) இன்று முதலும், ஷாலிமர்- திருவனந்தபுரம்  எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22642) வருகிற 5-ந்  தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி  கோத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16317) நாளை முதலும், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி  கோத்ரா - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16318) வருகிற 6- ந் தேதி முதல்  கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன. 

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×