என் மலர்
நீங்கள் தேடியது "900 கிலோ"
கடத்துவதற்கு வைத்திருந்த 900 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் ஆர்.ஐ. பிரவீனுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ரேசன் அரிசி மூட்டை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 18 மூட்டைகள் தயார் நிலையில் கட்டி கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தன.
அவைகளை பறிமுதல் செய்து திருச்செங்கோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகரின் பேரில், ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் யார்? என்பதை குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.