என் மலர்
முகப்பு » பதிவு துறையை சேர்ந்த
நீங்கள் தேடியது "பதிவு துறையை சேர்ந்த"
சேலம் மண்டலத்தில் பதிவு துறையை சேர்ந்த 25 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசு பதிவு துறையை சேர்ந்த சார்பதிவாளர்கள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன் ஆத்தூருக்கு மாற்றப்பட்டார். அவரது பணியிடத்துக்கு சேலம் சரக துணைப்பதிவாளர் ஷோபன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் பகுதி அதிகாரி அமிர்த லிங்கம் வீரபாண்டிக்கும், கூட்டுறவு அச்சகம் அதிகாரி மூகாம்பிகா, வீட்டு வசதி பிரிவுக்கும், நாச்சியப்பா மேலாண் நிலைய அதிகாரி கமலக்கண்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கும் என சேலம் மண்டலத்தில் 25 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
×
X