என் மலர்
நீங்கள் தேடியது "Median"
சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
சேலம்:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
லோடு ஏற்றி கொண்டு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது.
இந்த லாரி நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஒட்டி வந்தார். அப்போ து திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது.
பின்னர் சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதிய படி நின்றது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லாரியை மீட்டனர்.