என் மலர்
நீங்கள் தேடியது "நிதியமைச்சர்"
- உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று அகர்வால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
- எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்த கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறையையும் பிரேம்சந்த் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் பிஷ்ட்டின் கருத்துக்கு பிரேம்சந்த் பதிலளித்தபோது சர்ச்சை வெடித்தது. உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று பிரேம்சந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் சூடான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தினார். அவரது கருத்துக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பஹாடி மலைவாழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களைப் முன் வைத்தன.
தற்போது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் அழுதபடி பேசிய பிரேம்சந்த் , எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன். எனவே, இன்று, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
- தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
- 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி, சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- மாநிலங்களின் கருத்துக்களை பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் தகவல்
- கடன் உச்ச வரம்பை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு, மாநிலங்கள் நன்றி.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர். நிதித்துறையை கையாளும் முதலமைச்சர்களும், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரும் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டியவை குறித்த பல்வேறு ஆலோசனைகள் மாநிலங்கள் சார்பில் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை உயர்த்தியதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது.
- பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.
மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் (அம்பானி மற்றும் அதானி) டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.
சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது
கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் (சிபிஐ அமைச்சர்) அமைதி காத்தது ஏன்?
விசாரணைக்கான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் (ED அமைச்சர்) ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் அபத்தமானது.
இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.