என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மேலும் பல துணை குழுக்கள் இருப்பது தெரியவந்தது.

    இத்துணைக்குழுக்கள் மூலம் இந்த அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். எனவே கைதானவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் பல முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் இந்த அமைப்புக்கு தொடர்புடைய துணை குழுக்களின் அலுவலகங்களில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.

    அதன்படி முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதுபோல பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இச்சோதனை நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
    • அடிக்கடி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பின் துணை நிறுவனங்களும் தடை செய்யப்பட்டன.

    என்றாலும் தடையை மீறி அந்த அமைப்பின் நிர்வாகிகள் ரகசியமாக செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல்கள் தெரிய வந்தன.

    உளவுத்துறையினர் கொடுத்த உஷார் தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அடிக்கடி நாடுமுழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் 108 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அமைப்பு 285 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. 5 குற்றப்பத்திரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப் பத்திரிக்கைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்பேரில் அடிக்கடி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் இன்று உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், கோவா ஆகிய 4 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட னர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.

    பீகார் மாநிலத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 2 இடங்கள், பஞ்சாப், கோவாவில் தலா ஒரு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    மொத்தம் 17 இடங்களில் சோதனை நடப்பது தெரிய வந்துள்ளது.

    • மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.
    • ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வருகிறார்கள்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த அமைப்புகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    குறிப்பாக தென்கன்னட பகுதியில் மங்களூரு மற்றும் புதூர், பெல்டங்காடி, உப்பினங்காடி, வெனுர், பன்டேவால் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஆஸ்பத்திரிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபோல கேரளா மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடுகளிலும், அலுவலகத்திலும் இன்று என்.ஐ.ஏ. அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகள், வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதுபோல பீகார் மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பீகார், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த இச்சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.
    • மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வரும் 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்பட 6 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

    சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல் அதற்கு நிதியளித்தல் உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மீது விசாரணை இன்று நடக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.68.62 லட்சம் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், பணமோசடி வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இதையும் படியுங்கள்.. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல் ?
    ×