search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC."

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 7 மையங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 7 மையங்களில் இன்று தொடங்கியது
    நெல்லை:

     எஸ்.எஸ்.எல்.சி. , பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்தது. 

    இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி.  மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. 


    நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.  விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக பாளை மற்றும் வி.கே.புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 மையங்களும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக பாளை மற்றும் நாங்குநேரியில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளிகளில் 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.  

    இந்தப்பணிகளில் முதன்மை தேர்வானர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், உதவி தேர்வானர்கள் என சுமார் 900 ஆசிரியர்கள், அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 


    விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி 8-ந் தேதி தொடங்க உள்ளது. 


    தென்காசி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக  தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 

    அதுபோல பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தென்காசி தனியார் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியில் 910 ஆசிரியர்கள், 42 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×